புலிகள் தாக்குதல்-கருணா குழுவினர் 10 பேர் பலி
கொழும்பு:விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் கருணா கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர்காயமடைந்தனர்.
இலங்கை ராணுவத்துடன் கூட்டு சேர்ந்து கொண்டு விடுதலைப் புலிகள் மீது அவ்வப்போது தாக்குதல் நடத்திவருகிறது கருணா கும்பல்.
இந் நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் வாழை சேனையில் உள்ள இலங்கை ராணுவ முகாம் மீது விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதல் நடத்தினார். நேற்று இரவு தொடங்கி இந்த தாக்குதல் விடிய விடிய நடந்தது. இதில்ராணுவ முகாமுக்குள் பதுங்கியிருந்த கருணா கோஷ்டியைச் சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 4 பேர்காயமடைந்தனர்.
இதே போல புதுக்குடியிருப்பு, விநாயகபுரம் பகுதிகளிலும் துணை ராணுவ முகாம்களையும் புலிகள் தாக்கினர்.
அமைதி பேரணி மீது வெறித் தாக்குதல்:
இந்நிலையில் கொழும்பில் மக்கள் இயக்கத்தின் சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது. இதில் தமிழர்கள்,சிங்களவர்கள், முஸ்லிம்கள் உள்பட அனைத்து பிரிவினரும் கலந்து கொண்டனார்.
இந்த பேரணியில் இலங்கை அமைச்சர் மேர்வின் சில்வா தலைமையில் ஒரு குழுவினர் புகுந்து தாக்குதல்நடத்தினர். ஊர்வலத்தில் வந்தவர்களையும், பத்திரிக்கையாளர்களையும் அமைச்சரின் உத்தரவின் பேரில்குண்டர்கள் தாக்கினர். இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இந்நிலையில், கொழும்பில் நடந்து வரும் குண்டு வெடிப்புகளைத் தொடர்ந்து கொழும்பு தமிழர்களின்வீடுகளிலும் சுற்று பகுதிகளில் உள்ள வீடுகளிலும் இலங்கை ராணுவத்தினர் வீடு வீடாத சோதனை நடத்திவருகின்றனர். 40 அப்பாவி தமிழர்களையும் கைது செய்துள்ளனர்.












Click it and Unblock the Notifications