முல்லை-உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு
டெல்லி:முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் முன்னிலையில் கேரளத்துடன் பல கட்ட பேச்சு நடத்தியும் எந்த முடிவும்கிடைக்கவில்லை. இதனால் இதில் உச்ச நீதிமன்றமே தலையிட வேண்டும்.
அதே நேரத்தில் தமிழக அமைச்சர்கள், அதிகாரிகள் அணைப் பகுதிக்கு சென்றபோது கேரளத்தால் இடையூறு ஏற்பட்டது,மேலும் அணையின் சுவரும் சேதப்படுத்தப்பட்டுள்ளது. எனவே அங்கு கேரள போலீசாருக்கு பதிலாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினரை நிறுத்த வேண்டும் என அந்த மனுவில் தமிழக அரசு கூறியுள்ளது.
மலையில் உருண்டு பிரார்த்தனை:
இதற்கிடையே முல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூக தீர வேண்டும், உலகில் அமைதி நிலவ வேண்டும் என்பதை வலியுறுத்தி திருச்சி மலைக்கோட்டைஉச்சிப் பிள்ளையார் கோவில் மலையில் உருண்டு கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர் பிரார்த்தனை செய்தார்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோவில் மலை 273 அடி உயரம் கொண்டது. இந்தக் கோவிலுக்கு கரூர் மாவட்டம் நங்கவரம்கிராமத்தைச் சேர்ந்த 40 வயதாகும் நாகராஜன் என்பவர் இன்று காலை வந்தார்.
மலை அடிவாரத்திலிருந்து படிகளில் உருண்டபடியே அவர் மேலே சென்றார். அங்கு பிள்ளையாரை வணங்கி விட்டு மறுபடியும் உருண்டபடியே கீழே இறங்கினார்.
இது என்ன விநோதமான பிரார்த்தனை என்று நாகராஜனிடம் கேட்டால், கடந்த பத்து வருடங்களாக நான் இப்படித்தான் பிரார்த்னை செய்து வருகிறேன்.
2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதியன்று சுனாமியால் பலியானவர்களுக்கும் இப்படித்தான் படிகளில் உருண்டபடி ஏறி, இறங்கி பிள்ளையாரை வணங்கிஅவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தித்தேன்.
இப்போது உலக அமைதிக்காகவும், முல்லைப் பெரியாறு பிரச்சினை சுமூக தீர வேண்டும் என்பதற்காகவும் பிரார்த்தனை செய்தேன். எனது உடலில்வலு இருக்கும் வரை இப்படித்தான் வழிபடவுள்ளேன் என்கிறார் நாகராஜன்.
மொத்தம் உள்ள 418 படிக்கட்டுக்களையும் ஒரு மணி நேரத்தில் உருண்டு கடந்தார் நாகராஜன். நாகராஜனின் விநோதமான இந்த வழிபாட்டைஏராளமான மக்கள் திரண்டு நின்று பார்த்து அவரை ஊக்கப்படுத்தினர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications