நொய்டா: மேலும் 30 எலும்புக் கூடுகள் சிக்கின!
நொய்டா:உ.பி. மாநிலம் நொய்டாவில் சர்ச்சைக்குரிய பங்களா அருகே மேலும் 30 எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளன. இந்தவழக்கில் சிபிஐ விசாரணை தொடங்கியுள்ளது.
டெல்லி அருகே உள்ள நொய்டாவில், நித்தாரி கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமானபங்களாவில் ஏராளமான எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மொஹீந்தர் சிங், வீட்டுக் காவலாளி சுரேந்தர் கோலி ஆகியோரை போலீஸார் கைதுசெய்துள்ளனர். இந்தக் கொடூரர்கள், 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரைக் கொலை செய்து, உடல்களைத்துண்டு துண்டாக வெட்டி புதைத்துள்ளனர்.
சிறுமிகளைக் கற்பழித்துக் கொலை செய்துள்ளனர். அவர்களின் உடல் பாகங்களை சாப்பிட்டுள்ளான் சுரேந்தர்கோலி என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என உ.பி. மாநில எதிர்க்கட்சிகள்முலாயம் சிங் அரசை வலியுறுத்தின. ஆரம்பத்தில் இதை ஏற்காத முலாயம் சிங், எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்துசிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டார்.
இந்த நிலையில் நேற்று முறைப்படி இந்த வழக்கை சிபிஐ ஏற்றது. இந்த வழக்கை இதுவரை விசாரித்து வந்த 13பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை 3 பேர் கொண்ட சிபிஐ அதிகாரிகள் குழு சந்தித்துவழக்கு தொடர்பாக விவாதித்தது.
இந்த சந்திப்பின்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை உ.பி. போலீஸார் சிபிஐ அதிகா>களிடம் வழங்கினர்.வழக்கு தொடர்பான 19 முதல் தகவல் அறிக்கைகளை சிபிஐ அதிகாரிகளிடம் உ.பி. போலீஸார் ஒப்படைத்தனர்.
இதில் 17 முதல் தகவல் அறிக்கைகள் இதுவரை அடையாளம் காணப்பட்ட சிறார்கள் குறித்தது, மற்ற 2 முதல்தகவல் அறிக்கைகளும், இதுவரை அடையாளம் காணப்படாத உடல்கள் குறித்தது.
இந் நிலையில் மொஹீந்தர் சிங் வீட்டில் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தியபோது மேலும் 30 பேரின்எலும்புக் கூடுகள் சிக்கின. ஆனால் மண்டை ஓடு எதுவும் சிக்கவில்லை. இந்த எலும்புக் கூடுகளை தடயவியல்சோதனைக்கு அதிகாரிகள் அனுப்பியுள்ளனர்.
ஏற்கனவே 30க்கும் மேற்பட்டோரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ள நிலையில் தற்போது மேலும் 30 எலும்புகள்சிக்கியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையை அகமதாபாத்தில் நடந்த உண்மை அறியும் விசாரணைக்குப் பிறகு மொஹீந்தர் சிங் மற்றும்சுரேந்தர் கோலி ஆகிய இருவரும் நொய்டா கொண்டு வரப்பட்டனர். ரகசிய இடத்தில் வைத்து அவர்களிடம்தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் போலீஸ் காவல் இன்றுடன் முடிகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications