சிதம்பரம்: திமுக பிரமுகர் வெட்டிக் கொலை

Subscribe to Oneindia Tamil

சிதம்பரம்:சிதம்பரத்தில் நள்ளிரவில் வீடு புகுந்து திமுக பிரமுகர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

சிதம்பரம் அடுத்த தெற்கு பிச்சாவரத்தை சேர்ந்து சுப்பிரமணி (45), திமுக கிளைத் தலைவராக இருந்து வந்தார்.இந்நிலையில் இவரது உறவினர் பெண்ணுக்கு நேற்று மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. அப்போது தெற்குபிச்சாவரத்தை சேர்ந்த சந்திரன் (28) தனது நண்பர்களுடன் சேர்ந்து மஞ்சள் நீராட்டு விழா நடைபெறும் வீட்டுக்குமுன்பு தெருவிளக்கு வெளிச்சத்தில் அமர்ந்து சீட்டு விளையாட தொடங்கினர்.

இதைபார்த்த சுப்பிரமணி, சுபகாரியம் நடைபெறும் நேரத்தில் ஏன் இங்கு அமர்ந்து சீட்டு விளையாடு தொந்தரவுகொடுக்கிறீர்கள் என சந்திரனை கண்டித்தார். இதனால் சந்திரனுக்கும் சுப்பிரமணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது.

இதையடுத்து சுப்பரமணி தெரு விளக்கை அணைத்து வீட்டார். இதனால் ஆத்திரமடைந்த சந்திரன் தெருவில்அமர்ந்து நாங்கள் விளையாடுவதை எப்படி தடுக்கலாம் என்று தகராறு செய்தார். இதனால் இருவருக்கும்இடையே மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து சுப்பிரமணியின் தம்பி மதியழகன் தகராறை விலக்கிவிட்டு தெரு விளக்கை போட்டார். இருந்தாலும்சந்திரன் அங்கு நின்று சுப்பிரமணியின் குடும்பத்தை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால்மதியழகனுக்கும் சந்திரனுக்கும் இடையே வாக்குவதாம் ஏற்பட்டது. பின்னர் அங்கு இருந்தவர்கள் இருவரையும்சமதானப்படுத்தினர்.

இந்நிலையில் நள்ளிரவில் சந்திரனும், அவரது அண்ணன் கோவிந்தசாமியும் கையில் அரிவாளுடன் சுப்பிரமணிவீட்டுக்குள் புகுந்து அவரை சரமாரியாக வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர் அவர்கள் சுப்பிரமணியின் தாய் பச்சம்மாள், மனைவி லதா, தம்பி மதியழகன் ஆகியோரையும்வெட்டினர். இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். அவர்களிடம் இருந்து மதியழகன் தப்பி ஓடினார். ஆனால்அவரை அவர்கள் துரத்தி சென்றனர்.

இதனால் மதியழகன் பக்கத்தில் இருந்த கலைஞானம் என்பவரது வீட்டில் தஞ்சம் புகுந்தார். ஆனால் அவர்கள்கதவை உடைத்து மதியழகனை வெளியே இழுத்துப்போட்டு வெட்டனர். இதை தடுத்த கலைஞானத்தின் மனைவிஇளவரசிக்கும் வெட்டு விழந்தது.

இதையடுத்து சந்திரனும், கோவிந்த சாமியும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். நடு இரவில் நடந்த இந்த சம்பவம்அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+