வைகோவுக்கு ஆதரவா?-4 உறுப்பினர்கள் பல்டி
சென்னை:வைகோவுக்கு ஆதரவு தெரிவிப்பதாக நாங்கள் கையெழுத்துப் போடவில்லை என்று நான்கு மதிமுக பொதுக்குழுஉறுப்பினர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை ரத்து செய்யக் கோரி எல்.ஜி.ஆதரவாளரான சைதை சம்பத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதை எதிர்த்து கட்சி நடவடிக்கைகளில் இவர்கள் இருவரும் தலையிடக் கூடாது என்று உத்தரவிடக் கோரிமதிமுக சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவுடன் மதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் 1300பேரும் பிரமாணப் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்தனர்.
அதில், தாங்கள் வைகோ தலைமையிலான மதிமுகவில் இருக்கிறோம், வைகோவுக்கு ஆதரவாக உள்ளோம்என்று தெரிவித்திருந்தனர். தனித் தனி மனுவில் இதை அவர்கள் தெரிவித்திருந்தனர். நேற்று இந்த மனுக்கள்நீதிபதி தணிகாச்சலம் முன்னிலையில், விசாரணைக்கு வந்தது.
அப்போது விருத்தாச்சலம் ரவிக்குமார், அரசம்பட்டி ஏழுமலை, தெள்ளாறு ரவி, நல்லூர் தங்கசீனிவாசன்ஆகியோர் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர்.
அதில், நாங்கள் பொதுக்குழு உறுப்பினர்களாக உள்ளனர். எங்களிடம் வெற்றுத் தாளில் கையெழுத்து வாங்கிஅதை வைகோவுக்கு ஆதரவாக நாங்கள் இருப்பதாக எழுதிக் கொண்டு உயர்நீதிமன்றத்தில் தாக்கல்செய்துள்ளனர்.
வைகோவுக்கு ஆதரவு தெரிவித்து நாங்கள் எந்தக் கையெழுத்தும் போடவில்லை என்று தெரிவித்திருந்தனர்.அப்போது மதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயராமன், எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியஇருவரையும் நிரந்தரமாக நீக்கி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு ஆட்சேபனை தெரிவித்த எல்.ஜி. தரப்பு வழக்கறிஞர் வேங்கடபதி, ஏற்கனவே இருவரையும் நீக்கியதற்குஉயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அப்படி உள்ள நிலையில் நிரந்தரமாக அவர்களை நீக்கியதுநீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி விசாரணையை வருகிற 20ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications