மதுரை ரெளடிடோரி எண்கெளன்டரில் காலி:உடுப்பில் தமிழக ரெளடி சுட்டுக் கொலை
மதுரை- மணிப்பால்:மதுரை அருகே பிரபல ரெளடி டோரி மாரியை போலீஸார் சுட்டுக் கொன்றனர்.
மதுரை தெற்குவாசல் பகுதியைச் சேர்ந்தவன் டோரி மாரி. 10க்கும் மேற்பட்டகொலை, கொள்ளை வழக்குகளில் தொடர்புடையவன். குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான்.
![]() |
5 மாதங்களுக்கு முன்பு விடுதலையான மாரி, கடந்த நவம்பர் மாதம் ஒத்தக்கடையைச்சேர்ந்த ஞானசேகர் என்பவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டுத் தப்பிச்சென்றான்.
ஞானசேகர், டோரி மாரியின் கூட்டாளியாக இருந்தவன். பின்னர் மாரியை விட்டுபிரிந்து சென்னை சென்று கூலி வேலை பார்த்து பிழைத்து வந்தான். சில படங்களில்துணை நடிகராகவும் நடித்துள்ளான். தனது தம்பி தர்மரின் கல்யாணத்திற்காகஒத்தக்கடைக்கு வந்தபோது அவனை மாரி சுட்டுக் கொன்றான்.
இதையடுத்து மாரியைப் பிடிக்க போலீஸார் தீவிரமாக முயன்று வந்தனர். இந்நிலையில் நேற்று காலை மேலூர் அருகே உள்ள பனையன்குடி கண்மாய்ப் பக்கம் மாரிபதுங்கியிருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்து மாரியை சுற்றி வளைத்தனர்.போலீஸார் தன்னை முற்றுகையிட்டதைத் தொடர்ந்து தன்னிடமிருந்த கத்தியால்அவர்களைத் தாக்கினான் மாரி.
அதில் தலைமைக் காவலர்கள் முத்துப்பாண்டி மற்றும் கருத்தக்கண்ணன்ஆகியோருக்கு வெட்டுக்காயம் விழுந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர்சக்கரவர்த்தி தற்காப்புக்காக மாரியை சுட்டார். முதலில் முழங்காலில் சுட்டசக்கரவர்த்தி, அப்படியும் மாரி சரணடைய முன்வராததால், மார்பில் சுட்டார். இதில்சுருண்டு விழுந்து இறந்தான் மாரி.
காயமடைந்த இரு காவலர்களும் மேலூர் அரசு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டனர். மாரியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசுராஜாஜி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் திருப்பூரில் தொழிலதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். இந்தசம்பவத்திலும் மாரிக்குத் தொடர்பு இருக்கலாம் என போலீஸார் சந்தேகித்தனர்.இதையடுத்து மாரியைப் பிடிக்கும் முயற்சிகளை மதுரை மாவட்ட போலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர்.
உடுப்பியில் தமிழக ரெளடி சுட்டு கொலை:
இந் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ரெளடியான முல்கி ரபீக், கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே நடந்த போலீஸ் என்கெளண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டான்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்த ரபீக் மீது கர்நாடக மாநிலத்தில் 2 கொலை மற்றும் 21 கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.பாஜக தவைலர் சுக்கானந்த ஷெட்டி, பொலாலி அனந்து ஆகியோர் கொலை வழக்கிலும் தேடப்பட்டு வந்தான்.
இந்த நிலையில் சமீபத்தில் ரபீக்கை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அதன் பிறகு நடந்தது குறித்து மேற்கு மண்டல ஐஜி சத்யநாராயண ராவ்கூறுகையில், பொலாலி கொலை வழக்கு விசாரணையை முடித்து விட்டு ரபீக்கை மைசூருக்கு போலீஸார் ஜீப்பில் அழைத்துச் சென்று கொண்டிருந்தனர்.
ஜீப் மடிகேரி அருகே தேவரகொலி என்ற இடத்தில் வந்தபோது ரபீக் போலீஸாரிடமிருந்து தப்பிவிட்டான். ரபீக் செல்போன் மூலம் பேசியதை ஒட்டுக்கேட்டபோது உடுப்பிக்கும், மணிப்பாலுக்கும் இடையே அவன் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸார் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டனர். உடுப்பி ரயில் நிலையம் அருகே இன்று காலை 5.50 மணிக்கு ரபீக்கும் அவரது கூட்டாளியும்மோட்டார் சைக்களில் வந்தனர்.
அப்போது போலீஸார் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது ரபீக்கின் கூட்டாளி தப்பி ஓடி விட்டான். ரபீக் தப்ப முடியாமல் சிக்கிக் கொண்டான்.இதையடுத்து துப்பாக்கியால் போலீஸாரை நோக்கி 2 ரவுண்டு ரபீக் சுட்டான்.
போலீஸார் திருப்பிச் சுட்டதில் ரபீக் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தான் என்றார்.













Click it and Unblock the Notifications