அதிமுக, பாஜக, தேமுதிக கூட்டணியா?-ஜெ பதில்
சென்னை:மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 90வது பிறந்த நாளையொட்டி தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆரின்நினைவிடம் மற்றும் சிலைகளுக்கு அதிமுகவினர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆ>.ன் 90வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.இதையொட்டி சென்னையில் உள்ள அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்குபொதுச் செயலாளர் ஜெயலலிதா மாலை அணிவித்து தலைவர்கள், தொண்டர்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
பின்னர் பிறந்த நாள் சிறப்பு மலரை அவர் வெளியிட தூத்துக்குடி மாவட்ட அதிமுக அவைத் தலைவர்மணிமொழியன் பெற்றுக் கொண்டார். பின்னர் நடிகர் எஸ்.வி.சேகரின் 5007வது நாடக மலரை ஜெயலலிதாவெளியிட, எம்.பி. எஸ்.எஸ்.சந்திரன் பெற்றுக் கொண்டார். பின்னர் அதிமுகவினருக்கு நலத் திட்டஉதவிகளையும் ஜெயலலிதா வழங்கினார்.
கூடியிருந்த ஆயிரக்கணக்கான தொண்டர்களிடையே ஜெயலலிதா பேசுகையில், திமுகவுக்கு இப்போதுகிடைத்துள்ள வாழ்வு தற்காலிகமானது. திமுகவினர் ஆட்டம் போடுகிறார்கள். கூத்தடிக்கிறார்கள்.
அராஜக வெறியாட்டம் நடத்துகிறார்கள். வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நாம் ஆட்சிஅமைத்தோம், மக்களுக்கு நன்மைகள் செய்தோம். 1996ம் ஆண்டு இருந்த நிலையை திரும்பிப் பார்க்கிறபோது,இப்போது மிக நல்ல நிலையில் இருக்கிறோம்.
அதிமுகவுக்கு மிகப் பிரகாசமான, ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது. அதை யாராலும் நம்மிடிருந்துபறித்து விட முடியாது. திமுகவின் கதை முடியப் போகிறது. சூரியன் அஸ்தமிக்கப் போகிறது.
ஆனால் அதிமுக ஒரு தொடர்கதை. எம்.ஜி.ஆருக்குப் பிறகு அதிமுகவுக்கு நான் கிடைத்தேன். எனக்குப் பிறகுஒருவர் வருவார், அவருக்குப் பிறகும் தலைவர்கள் வருவார்கள். ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அதிமுகநீடிக்கும், தொடர்ந்து மக்கள் பணியாற்றிக் கொண்டே இருக்கும்.
தொண்டர்களிடம் இன்று நிலவும் மகிழ்ச்சியும், எழுச்சியும் தொடர்ந்து நிலைத்திருக்கட்டும், தொய்வின்றி மக்கள்பணியாற்றுவோம். விரைவிலையே ஆளும் பொறுப்பை நமக்கு மக்கள் தருவார்கள். அதை நாம் அடைந்தேதீருவோம் என்றார் ஜெயலலிதா.
பின்னர் செய்தியாளர்களிடம் ஜெயலலிதா பேசுகையில், விரைவில் எம்.ஜி.ஆர். ஆட்சியை அமைப்போம்,அதற்கு எம்.ஜி.ஆரின். பிறந்த நாளில் சபதம் ஏற்போம் என்பதுதான் அதிமுக தொண்டர்களுக்கு நான் விடுக்கும்செய்தி.
சென்னை மாநகராட்சித் தேர்தல் முறைகேடுகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ஏற்றுமுதல்வர் பதவியிலிருந்து கருணாநிதி அவராகவே விலகியிருக்க வேண்டும். தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பில்நீடிக்கும் உரிமையை கருணாநிதியும், அவரது சிறுபான்மை அரசும் இழந்து விட்டனர்.
அவர்களாக பதவியிலிருந்து விலகுவார்கள் என எதிர்பார்க்க முடியாது. அது வீண். அவர்கள் விலக மாட்டார்கள்.விரைவிலேயே மக்கள் அந்த மாற்றத்தைக் கொண்டு வருவார்கள்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்தது விட்டது. கொலை, கொள்ளை கற்பழிப்பு, வன்முறை உள்ளிட்ட குற்றச்செயல்கள் அதிகரித்து விட்டன. பட்டப் பகலிலேயே குற்றச் செயல்கள் நடக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
விலைவாசி உயர்ந்து விட்டது. மக்கள் பெரிதும் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இலவசப் பொருட்களைத் தருவதாக கூறி திமுக சிறுபான்மை அரசு நாடகமாடி வருகிறது. ஆட்சியையே கேலிக்கூத்தாக்கி விட்டார்கள். தினமும் ஏதாவது ஒன்றை இலவசமாக தருகிறோம் என அறிவிப்பதைப் பார்க்கும்போது,அரசு செயல்படுகிற விதத்தைப் பார்க்கும்போது, விரைவில் அரசை திவாலாக்கப் போகிறார்கள் என்றுதான்தோன்றுகிறது. அந்த நிலைதான் விரைவில் வரப் போகிறது.
இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக தேவையற்ற வகையில் தொடர்ந்து பேசி வருகிறார் கருணாநிதி.முதல்வர் பதவியில் இருக்கும் ஒருவர் இவ்வாறு குறிப்பிட்ட ஒரு மதத்திற்கு சாதகமாக பேசுவதுகண்டனத்துக்குரியது. இவற்றுக்கெல்லாம் சேர்த்து வைத்து மக்கள் தண்டனை வழங்கப் போகிறார்கள். அதை நாம்பார்க்கத்தான் போகிறோம்.
தேசிய அளவில் 3வது அணிக்கான சாதகமான சூழ்நிலை இன்னும் வரவில்லை. மூன்றாவது அணியைஅமைப்பதாக இருந்தால் காங்கிரஸ், பாஜக அல்லாத கட்சிகள் அனைத்தும் இணைய வேண்டும். ஆனால்இப்போது அத்தகைய சூழ்நிலை வரவில்லை.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அனைத்து விதத்திலும் தோல்வி அடைந்து விட்டது. மத்திய கூட்டணிஆட்சி திருப்திகரமாக இல்லை. தீவிரவாதத்தைக் கையாளும் பிரச்சினை முதல் இந்திய, அமெரிக்க அணு சக்திஒப்பந்தம் வரை அனைத்திலுமே இந்தியாவுக்கு பாதகமான நிலைதான் காணப்படுகிறது.
அதிமுக, பாஜக, தேமுதிக இணைந்து செயல்பட வேண்டும் என துக்ளக் ஆசிரியர் சோ கூறியிருப்பது அவரதுசொந்தக் கருத்து. கருத்தை வெளிப்படுத்த ஒவ்வொருவருக்கும் உரிமை உள்ளது என்றார் ஜெயலலிதா.
சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் பல்வேறு அரசியல் தலைவர்கள், அதிமுகவினர்அஞ்சலி செலுத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு அதிமுக எம்.பிக்கள் மலர் வளையம் வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications