டி.ஆர்.பாலுவுக்கு கப்பலை வாங்கியது ஏன்?
சென்னை:சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்பதால்தான் கப்பல் போக்குவரத்துத் துறையைபிடிவாதமாக கேட்டு வாங்கியதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
சென்னை துறைமுகத்தின் 125வது ஆண்டு விழாவில் பேசிய கருணாநிதி,
முன்பொருமுறை நான் துறைமுகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறித்து யாரோ சிலர்(ஜெயலலிதா) தவறாகப் பேசியதாக கப்பல் துறை அமைச்சர் டி.ஆர்.பாலு நொந்து போய் இங்கு பேசினார்.
நொந்து போனவர்கள் பேசுவதைக் கேட்டு நாம் நொந்து கொள்ளத் தேவையில்லை. நொந்துபோனவர்களுக்காகவும், நொந்து போனவர்களைக் காப்பாற்றுவதற்காகவும் இருக்கும் இயக்கம்தான் திமுக.
மத்திய ஆட்சியும் அப்படித்தான். இரண்டு ஆட்சிகளும் நல்ல முறையில் இயங்க வேண்டும் என்பதற்காகத்தான்நாம் பணியாற்றி வருகிறோம்.
டெல்லி சென்று டி.ஆர்.பாலுவுக்காக கப்பல் மற்றும் நெடுஞ்சாலைத் துறைகளை பெற்றுக் கொண்ட வந்த சம்பவம்நினைவுக்கு வருகிறது. காங்கிரஸ் தலைமையில் மத்தியில் ஆட்சி அமையும்போது தமிழகத்தில் உள்ள தோழமைக்கட்சிகளான திமுக, பாமக கட்சிகளுக்கு துறைகள் ஒதுக்கப்பட்டன.
அப்போது டி.ஆர்.பாலுவுக்கு நான் விரும்பிக் கேட்டது கப்பல் மற்றும் நெடுஞ்சாலைப் போக்குவரத்துத் துறை.உடனடியாக அந்தத் துறைகள் வழங்கப்பட்டன.
ஆனால் கப்பலை அவர் அங்கு விட்டு விட்டுத்தான் சென்னைக்கு வந்தார். கப்பல் கடலிலே மிதந்து விட்டது.எப்படி மிதந்தது என்பது தெரியவில்லை. அது தெலுங்கானா கப்பல் (தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சிக்குகப்பல்துறை ஒதுக்கப்பட்டது) என்றார்கள். இதுகுறித்து பாலுவிடம் கேட்டேன்.
தெலுங்கானா போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர் அந்தக் கப்பலை வாங்கி விட்டார் என்றார். நான் கப்பல்துறையை கேட்டது எனக்காக அல்ல, இங்குள்ள மத்திய அமைச்சர்கள் யாருக்காகவும் அல்ல.
200 ஆண்டுகளாக நமது கனவாக இருக்கிறதே, சேது சமுத்திரத் திட்டம். அதை நிறைவேற்ற வேண்டுமானால்,கப்பல் போக்குவரத்துத் துரை நமக்கு ஆதாரமாக நமது கையில் இருந்தாக வேண்டும்.
இதற்காகத்தான், கப்பல் துறையை நான் கேட்டேன். பாலு அதை நிறைவேற்றித் தருவார் என்றநம்பிக்கையில்தான் கப்பல் துறையைப் பெறுவதில் நான் பிடிவாதம் காட்டினேன். வெற்றியும் பெற்றேன். இன்னும்2 அல்லது 3 ஆண்டுகளில் சேது சமுத்திரத் திட்டம் நிறைவேறியது என்ற வெற்றியை நான் மாத்திரம் அல்ல, நாம்அனைவரும் பெறுவோம்.
1875ம் ஆண்டு சென்னை துறைமுகத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக இங்கு வந்த வேல்ஸ்இளவரசியை வரவேற்று மகாகவி பாரதியார் கவிதை பாடி வரவேற்றார் என்று சரித்திரம் கூறுகிறது. அதன்பின்னர் எப்படியெல்லாம் இந்த துறைமுகம் வளர்ந்து விட்டது?
கடந்த ஆண்டுகளில் சென்னை துறைமுகத்துக்கு கார்கள் இறக்குமதி செய்யப்பட்டன. 1934-35ம் ஆண்டில் 1,258கார்கள் இங்கு வெளிநாட்டிலிருந்து வந்தன. ஆனால் இன்று இங்கிருந்து கார்கள் ஏற்றுமதியாகும் நிலைவந்துள்ளது.
திமுக ஆட்சியில், 2000மாவது ஆண்டில் 760 கார்கள் சென்னை துறைமுகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன.இது பின்னர் வளர்ந்து 3 லட்சமாக மாறியது. முதன் முதலாக தமிழகத்தில் இருந்து கார் ஏற்றுமதிக்கு வழி செய்தஅரசு திமுக தான் என்பது பெருமையாக உள்ளது என்றார் கருணாநிதி.
நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் டி.ஆர்.பாலு, வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், பழனிமாணிக்கம்,சுப்புலட்சுமி ஜெகதீசன், ரகுபதி, ஆர்.வேலு, மாநில அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.
விழாவின் முக்கிய அம்சமாக, கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட தீப்சி என்ற சிறுமி தமிழ்த் தாய் வாழ்த்தைபடு அழகாக, தெளிவான உச்சரிப்புடன் பாடி கருணாநிதி உள்ளிட்ட அனைவரையும் கவர்ந்தார்.
இவருக்கு தாய் மொழி மலையாளம், தமிழ் சுத்தமாக படிக்கத் தெரியாதாம். இவரது தந்தை சென்னைதுறைமுகத்தில் ஊழியராக இருக்கிறார். விழா முடிவிலும் இவரே தேசிய கீதத்தையும் அழகாக பாடி அசத்தினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications