வாகரையை மீட்டு விட்டோம்-இலங்கை ராணுவம்
கொழும்பு:இலங்கையின் கிழக்கில் விடுதலைப் புலிகள் வசம் இருந்த வாகரை நகரை மீட்டுள்ளதாக இலங்கை ராணுவம்அறிவித்துள்ளது. ஆனால் இதை விடுதலைப் புலிகள் உறுதிப்படுத்தவில்லை.
இலங்கையின் கிழக்கில் உள்ள முக்கிய நகரம் வாகரை. இந் நகரின் பெரும்பகுதி விடுதலைப் புலிகள் வசம்இருந்து வருகிறது. வாகரையைப் பிடிக்க இலங்கை ராணுவம் கடும் தாக்குதலை நடத்தி வந்தது.
வாகரையைச் சுற்றிலும் உள்ள தமிழர் பகுதிகள் மீது ராணுவம் நடத்திய கடும் தாக்குதலால் அங்கு வசித்து வந்ததமிழர்கள் புகலிடம் தேடி ராணுவத்தின் பிடியில் உள்ள பகுதிகளுக்கு இடம்பெயரும் நிர்ப்பந்தம் ஏற்பட்டது.ராணுவமும் அதைத்தான் விரும்பியது.
இந்த நிலையில் வாகரையில் பெரும் தாக்குதலை நடத்தி வந்த ராணுவத்தின் தொடர் நடவடிக்கையால்அங்கிருந்து 12,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவத்தின் வசம் உள்ள பகுதிக்கு இடம் பெயர்ந்தனர்.
இதைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் மீது ராணுவம் உக்கிரத் தாக்குதலை மேற்கொண்டது. இதில் வாகரையைவிட்டு விடுதலைப் புலிகள் வெளியேறி விட்டதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ராணுவத் தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், விடுதலைப் புலிகள் வாகரையை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் வசம் இருந்த மருத்துவமனையையும் ராணுவம் பிடித்துள்ளது என்று அதில்தெ>விக்கப்பட்டுள்ளது.
வாகரை வீழ்ந்ததாக ராணுவம் தெரிவித்துள்ளது குறித்து விடுதலைப் புலிகள் தரப்பில் தகவல் ஏதும் இல்லை.இதனால் இதை உறுதிப்படுத்த முடியவில்லை.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications