தாமிரபரணி பாட்டுக்கு பாஜக எதிர்ப்பு
சென்னை:தாமிரபரணி படத்தில் பிரபல பாடகி எல்.ஆர்.ஈஸ்வரி பாடிய புகழ் பெற்ற கற்பூர நாயகியே கனகவல்லி பாடலைரீமிக்ஸ் செய்து டூயட் பாடலாக போட்டுள்ளதற்கு தமிழக பாஜக பொதுச் செயலாளர் தமிழிசை செளந்தரராஜன்கண்டனம் தெரிவித்துள்ளார்.
அந்தக் காலக் குத்துப் பாட்க்களை பாடிப் புகழ் பெற்றவர் எல்.ஆர்.ஈஸ்வரி. கலகல குரல் வளம் கொண்டஎல்.ஆர்.ஈஸ்வரி, அம்மன் பாடல்களைப் பாடுவதிலும் பிரபலமானவர். அவரது அம்மன் பாட்டுக்கள் இன்றும்கூட நம்ம ஊர் கோவில்களில் படு விசேஷமாக இடம் பெறுகிறது.ஈஸ்வரி பாடிய பாடல்களில் மிகவும் பிரபலமான பாடல் கற்பூர நாயகியே கனகவல்லி, மாரி கருமாரியம்மா என்றபாடல். இப்பாடலை தமிழ் சினிமாக்காரர்கள் ரீமிக்ஸ் செய்து டூயட் பாட்டாக்கி விட்டனர்.
ஹரி இயக்கத்தில், விஷால், பானு நடிப்பில் வெளியாகியுள்ள தாமிரபரணி படத்தில் இப்பாடலை ரீமிக்ஸ் செய்துடூயட் பாடலாக இடம் பெற வைத்துள்ளனர்.
யுவன் ஷங்கர்ராஜாதான் இந்தப் பாடலை ரீமிக்ஸ் செய்துள்ளார். இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. நா.முத்துக்குமார் ரீமிக்ஸ் பாடலை எழுதியுள்ளார். பாடலைப் பாடியது, குத்து படத்தில் இடம்பெற்ற போட்டுத்தாக்கு என்ற குத்துப் பாட்டைப் பாடிய ரோஷினியும், ரஞ்சித்தும்தான்.
கருப்பண்ணன் கையால என்னப் புடிச்சான் என்று ஆரம்பிக்கும் இந்தப் பாடலுக்கு பாஜக கடும் கண்டனம்தெரிவித்துள்ளது. இந்த செயல் இந்துக்களின் மனதைப் புண்படுத்தும் விதமாக உள்ளதாக தமிழிசைசெளந்தரராஜன் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், கற்பூரநாயகியே கனகவல்லி பாடல் சாதாரணப் பாடல் அல்ல. அது இந்துக்களின்உணர்வோடு, கலந்த ஒன்று. இந்தபாட்டின் மெட்டைக் கேட்டாலே அம்மனின் உருவம் நம் மனக் கண் முன்தோன்றி ஆன்மீக சிந்தனையில் மூழ்கி விடுவோம்.
தமிழகத்தின் அத்தனை கோவில்களிலும் தவறாமல் ஒலிக்கும் அற்புதப் பாடல் இது. இப்படிப்பட்ட புனிதமானபாடலை காதல் காட்சிக்கு காப்பி அடிக்க பயன்படுத்தியிருப்பது மிகவும் கண்டனத்துக்குரியது.
பழைய படங்களின் பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் செயல் சமீப காலமாக அதிகரித்து வருகிறது. ஆட்டைக் கடித்துமாட்டைக் கடித்து கடைசியில் மனிதனைக் கடிப்பது போல இப்போது ஆன்மீகப் பாடலையும் அநாகரீகமாகரீமிக்ஸ் செய்துள்ளனர்.
இயக்குநர் ஹரி, சிறந்த இயக்குநர், குடும்பப் பாங்கான படங்களை எடுப்பவர். கடவுள் பாட்டை குத்துப்பாட்டுக்கு பயன்படுத்துவதை அவர் தவிர்த்திருக்க வேண்டும். யுவன் ஷங்கர் ராஜா இப்படி ஒரு செயலைசெய்திருக்கக் கூடாது. நா. முத்துக்குமார் நல்ல கவிஞர்.
இப்படி மூன்று இளைஞர்களும் சமுதாயப் பார்வை உள்ளவர்கள். அப்படிப்பட்ட இவர்கள் கடவுள் பாட்டைகுத்துப் பாட்டாக்கியது வருத்தம் தருகிறது. உடனடியாக இந்தப் பாடலை மாற்ற வேண்டும் என்ார் தமிழிசை.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications