நாமக்கல் முட்டைகளுக்கு யு.ஏ.இ. தடை நீக்கம்
புனே:இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்ததடையை எமிரேட்ஸ் நீக்கியுள்ளது. இவற்றில் பெரும்பாலான முட்டைகள் நாமக்கல்லில் இருந்துஅனுப்பப்படுவது குறிப்பிடத்தக்கது.
நேற்று முதல் இந்த தடை நீக்க உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. கடந்த ஆண்டு பறவைக் காய்ச்சல் ஆசியநாடுகளில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து இந்தியாவிலிருந்து ஐக்கிய அரபுஎமிரேட்ஸுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்தது.
துபாய்க்குத்தான் இந்திய முட்டைகள் அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. தினமும் 75 லட்சம்முட்டைகள் துபாய்க்கு ஏற்றுமதியாகி வந்தன. இவற்றில் முக்கால்வாசி முட்டைகள் நாமக்கல்லில் இருந்து தான்சென்று கொண்டிருந்தன.
தற்போது பறவைக் காய்ச்சல் பீதி அறவே போய் விட்டதால் இந்தத் தடையை நீக்க வேண்டும் என்று கோரிதேசிய முட்டை ஒருங்கிணைப்புக் கமிட்டியின் சார்பில் 2 குழுக்கள் துபாய்க்கும், அபுதாபிக்கும் அனுப்பப்பட்டன.இக்குழுவில் ராசிபுரம் எம்.பி. ராணியும் இடம் பெற்றிருந்தார்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் இந்தக் குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தைநடத்தினர். இந்தப் பேச்சுவார்த்தையின் விளைவாக தற்போது முட்டைகளை ஏற்றுமதி செய்ய விதித்திருந்ததடையை எமிரேஸ்ட்ஸ் நீக்கியுள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன் செளதி அரேபியா தடையை நீக்கியது. இதன் மூலம் மேற்காசிய நாடுகள்முழுவதிலும் இந்திய முட்டைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியுள்ளது.
குவைத், பஹ்ரைன் ஆகிய நாடுகள் இந்திய முட்டைகளுக்கு தடை விதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications