இன்னும் கொலை வெறி தணியாத சுரேந்தர்!
நொய்டா:உ.பி. மாநிலம் நொய்டா அருகே நித்தாரி கிராமத்தில் ஏராளமான சிறுவர்,சிறுமியரைக் கொடூரமாக கொலை செய்து சாக்கடையில் வீசியதாக கைதுசெய்யப்பட்டுள்ள சுரேந்தர் கோலிக்கு இன்னும் கொலை வெறி தணியவில்லைஎன்றுசிபிஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நொய்டா அருகே மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான பங்களாவிலிருந்துஏராளமான எலும்புக் கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன. இன்னும் அங்கு தோண்டத்தோண்ட எலும்புக்கூடுகள் வந்தவண்ணம் உள்ளது.
30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரைக் கொடூரமாகக் கொன்று உடல்களைசிதைத்தும், வெட்டியும் சாக்கடையில் வீசியுள்ளனர், மொஹீந்தர் சிங்கும், அவரதுவீட்டு வேலையாள் சுரேந்தர் கோலியும்.
இந்த வழக்கை தற்போது சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இவர்களிடம்முதல் கட்ட விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், சுரேந்தர் கோலிக்கு இன்னும்கொலை வெறி தணியவில்லை என்று தெ>வித்துள்ளனர்.
இன்னும் யாரையாவது கொல்லலாம் போலத் தோன்றுவதாகவும், வன்முறையுடனும்,முரட்டுத்தனத்துடனும் கோலி நடந்துகொள்வதாகவும், பேசி வருவதாகவும்கூறப்படுகிறது.
இதையடுத்து கோலியை கைவிலங்கிட்டு காவலில் வைத்துள்ளனர். அவரிடம்விசாரணை நடத்தும் அதிகாரிகள் தேவைப்பட்டால் கைத் துப்பாக்கியை வைத்துக்கொள்ளும்படியும் சிபிஐ அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் மொஹீந்தர் சிங்கையும், கோலியையும் தனித் தனி அறைகளில்வைத்துள்ளனர். இந்த நிலையில், சிறார்களைக் கொல்லப் பயன்படுத்தி கோடாரியைசிபிஐ அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications