கூடங்குளம் அணு உலைக்கு ரஷ்ய எரிபொருள்!
மாஸ்கோ:இந்தியாவில் அதிக அளவில் அணு உலைகளை கட்டித் தர ரஷ்யா முடிவுசெய்துள்ளது.
வரும் குடியரசு தின விழாவின் சிறப்பு விருந்தினராக புடின் அழைக்கப்பட்டுள்ளார்.இதற்காக 25ம் தேதி புடின் இந்தியா வருகிறார். அவரது விஜயத்தின்போது பல்வேறுமுக்கிய ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திடவுள்ளன.
இதுகுறித்து பெங்களூர் வந்துள்ள ரஷ்ய பாதுகாப்பு அமைச்சர் செர்ஜி இவனோவ்கூறுகையில்,
இந்தியாவில் அதிக அளவில் அணு உலைகளை கட்டித் தர ரஷ்யா முடிவுசெய்துள்ளது. பல கோடி மதிப்பிலான இந்த அணு உலைகள் கட்டுமானம் தொடர்பானஒப்பந்தம் புடினின் டெல்லி பயணத்தின்போது கையெழுத்தாகும்.
தமிழகத்தின் கூடங்குளத்தில் கூடுதல் அணு உலைகளைக் கட்டித் தரவும் ரஷியாமுன்வந்துள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தமும் புடினின் விஜயத்தின்போதுகையெழுத்தாகும் என்றார் இவனோவ்.
பொருளாதார ரீதியில், ஆசியாவிலேயே நான்காவது பெரிய நாடாக இந்தியாதிகழ்வதால், இந்தியாவுடனான நெருக்கத்தை அதிகரிக்க ரஷ்யா முடிவு செய்துள்ளது.இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவுக்கும், ரஷியாவுக்கும் இடையேஇப்போது கடும் போட்டியே நிலவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுடனான ஆயுதம், மின்சாரம், அணு ஆயுத விற்பனையை வலுப்படுத்திக்கொள்வதில் ரஷ்யா தற்போது தீவிரம் காட்டுகிறது.
ஏற்கனவே கூடங்குளத்தில் 1,000 மெகாவாட் திறனுடைய 2 அணு உலைகளைரஷியா கட்டிக் கொடுத்து வருகிறது. இதுதவிர தற்போது கூடுதலாக 4 அணுஉலைகளை ரஷ்யா கட்டித் தரவுள்ளது. மேலும் பிற இடங்களில் இந்த அணு உலைகள்கட்டித் தரப்படும்.
இதற்கிடையே, கூடங்குளம் அணு உலைக்கு இந்த ஆண்டின் பிற்பகுதியில், கதிரியக்கஎரிபொருளை ரஷ்யா அனுப்பி வைக்கவுள்ளதாக அந்நாட்டு அணு சக்தித்துறைதலைவர் செர்ஜி கிரியன்கோ தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications