தீர்ப்பை நோக்கி தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு!
சேலம்:தர்மபுரியில் கடந்த 2000ம ஆண்டு கோவை வேளாண் கல்லூரி மாணவிகளைஅதிமுகவினர் உயிரோடு தீ வைத்து கொளுத்தி, 3 பேரை எரித்துக் கொன்ற வழக்கில்நாளை (25ம் தேதி) இறுதி விசாரணை நடைபெறவுள்ளது.
இதையடுத்து அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது.
![]() |
இதயம் உள்ள எவராலும் மறக்க முடியாத நாள் 2.2.2000. முன்னாள் முதல்வர்ஜெயலலிதாவுக்கு, கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் ஊழல் வழக்கில்சென்னை தனி நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது.
இதையடுத்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பெரும் வன்முறையில் இறங்கினர்.அவர்களின் ஆவேசத் தாக்குதல், தர்மபுரியில் உச்சத்தை அடைந்தது. அதன் விளைவுஅக்னியில் கருகி 3 இளம் மொட்டுக்கள் அநியாயமாக கருகின.
அப்போது, கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவ, மாணவியர் தங்களதுபேருந்தில் சுற்றுலாவை முடித்து விட்டு கோவைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.தர்மபுரியில் அதிமுகவினர் வன்முறை நடத்திக் கொண்டிருந்த பகுதியில் அவர்களதுபேருந்து வந்தது. அதைத் தடுத்து நிறுத்தியது கும்பல்.
பேருந்தை நிறுத்திய அக்கும்பல், பெட்ரோல் ஊற்றித் தீ வைத்தது. பேருந்தில்இருப்பது மாணவ, மாணவியர், ஆசிரியர்கள் என்றி தெரிந்தும் அந்தக் கும்பல்அவர்களை பஸ்ஸை விட்டு இறங்கக் கூட விடாமல் தடுத்து தீ வைத்தது.
இந்த கும்பலின் வெறியாட்டத்தில் கோகிலவாணி, காயத்ரி, ஹேமலதா ஆகிய 3மாணவிகள் பரிதாபமாக உயிருடன் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.
3 அப்பாவி மாணவிகளை உயிரோடு தீ வைத்து எரித்துக் கொன்ற கொடூரச் செயல்தமிழகத்தை மட்டுமல்லாது நாட்டையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது.
![]() |
இந்த கொடூரம் தொடர்பாக 31 அதிமுகவினர் மீது கிருஷ்ணகிரி நீதிமன்றத்தில் வழக்குதொடரப்பட்டது. ஆனால், கடந்த அதிமுக ஆட்சியில் இந்த வழக்கு விசாரணைமுற்றிலும் படு மோசமாக, பாரபட்சமாக நடத்தப்பட்டது.
குற்றவாளிகளை போலீசார் ராஜாக்கள் போல நடத்தினர். சாட்சிகளை போலீசாரும்அதிமுகவினரும் சேர்ந்தே மிரட்டினர். போலீசாரும் வழக்கு விசாரணையைஏனோதானோ என்று நடத்தி குற்றவாளிகளை தப்ப வைக்க முயன்றனர். இவர்களுக்குஅரசு வக்கீலும் உதவினார்.
இதனால் நிச்சயம் நீதி கிடைக்காது என்ற நிலையில் வழக்கை வேறு நீதிமன்றத்துக்குமாற்றக் கோரி இறந்து போன மாணவி கோகிலவாணியின் தந்தை வீராசாமி சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.
இந்த மனுவை 2003ம் ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம், அதிமுகவினருக்கும்அரசுக்கும் போலீசாருக்கும் கடும் கண்டனம் தெரிவித்தது.
வழக்கை சேலம் செஷன்ஸ் நீதிமன்றத்துக்கு மாற்ற உத்தரவிட்டது. மேலும் அரசுவழக்கறிஞரையும் மாற்றி உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கு சேலத்திற்குமாற்றப்பட்டது. மொத்தம் 125 சாட்சிகள் இந்த வழக்கில் சேலம் நீதிமன்றத்தில்விசாரிக்கப்பட்டனர்.
சேலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பிறகும் கூட அதிமுக அரசின் ஒத்துழைப்புஇல்லாததால், வழக்கு விசாரணை மிகவும் தாமதமாகவே தொடங்கியது. கடந்த2005ம் ஆண்டு மார்ச் மாதம்தான் சாட்சிகள் விசாரணையே ஆரம்பமானது.
வேளாண் பல்கலைக்கழக பேராசிரியைகள் லதா, சுசீலா, பேருந்து டிரைவர், கிளீனர்,மாணவ, மாணவியர், கிராம நிர்வாக அதிகாரி ராமசுந்தரம், பிரேதப் ப>சோதனைசெய்த அரசு மருத்துவர், காவல்துறை அதிகாரி சமுத்திரப் பாண்டியன், கிருஷ்ணகிரிமாஜிஸ்திரேட் உள்ளிட்ட 125 பேர் சாட்சியம் அளித்தனர்.
இதில் பேராசிரியைகளும் மாணவ, மாணவிகளும் சாட்சிக் கூண்டுகளில் ஏறிசம்பவத்தை நினைவு கூர்ந்து கதறி அழுதபடியே சாட்சி கூறினர். இது நீதிமன்றத்தில்இருந்த அனைவரையும் கலங்கடித்தது.
கடைசி முறையாக வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குற்றம்சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ரவிச்சந்திரன் வாய்தா கேட்டார்.இதைக் கேட்டு கோபமடைந்த நீதிபதி கிருஷ்ணராஜா, எதற்காக வாய்தா கேட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். ஏதாவது ஜோசியம் பார்க்கப் போகிறீர்களா என்றுஆவேசமாக கேட்டார். இனிமேல் வாய்தாவெல்லாம் தர முடியாது என கண்டிப்பாககூறினார்.
அரசுத் தரப்பு வாதம் முடிவடைந்து விட்ட நிலையில் தற்போது எதிர் தரப்புவழக்கறிஞர் தனது வாதத்தை வைத்து வருகிறார். நாளையுடன் அவரது வாதம்முடிவடைகிறது. அதன் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு அனேகமாக அடுத்த மாதஇறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசு வழக்கறிஞருக்கு அதிமுக மிரட்டல்:
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் அரசு சார்பில் சேலத்தைச் சேர்ந்தமூத்த வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜரானார். அவர் வழக்கு குறித்துக் கூறுகையில்,
ஆரம்பத்திலிருந்தே இந்த வழக்கில் எனக்கு ஏராளமான மிரட்டல்கள், இடையூறுகள்வந்தன. ஆனால் நான் பொருட்படுத்தவில்லை.
சம்பவம் நடந்த இடத்தில் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை நான் பலமுறைபார்த்தேன். அதன் பிறகு பல நாட்கள் என்னால் தூங்க முடியவில்லை. அத்தனைகொடூரமான சம்பவம் அது.
இந்த வழக்கில் ராஜேந்திரன் என்பவர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டள்ளார்.இவர் சம்பவம் நடந்தபோது தர்மபுரி ஒன்றிய அதிமுக செயலாளராக இருந்தார்.இவருக்கு அடுத்து நெடுஞ்செழியன், மாது என்கிற ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர்முக்கிய குற்றவாளிகளாக உள்ளனர்.
இவர்கள் மூன்று பேரும்தான் பாரதிபுரம் என்ற இடத்தில் உள்ள மெஜஸ்டிக் ஆட்டோஒர்க்ஷாப்பில் போய் அங்குள்ள பையனிடம் பணம் கொடுத்து கேனில் பெட்ரோல்வாங்கி வரச் சொன்னவர்கள்.
அந்த பெட்ரோலை பேருந்து முழுவதும் தெளித்த அவர்களிடம், நாங்கள் இறங்கிக்கொள்கிறோம், அப்புறம் கொளுத்துங்க என்ற மாணவ, மாணவியர்கள்கெஞ்சியபோது அதைக் கண்டுகொள்ளவில்லை.
இரண்டாவது எதி>யான நெடுஞ்செழியன் இரக்கமே இல்லாமல் தீ வைத்துள்ளார்.இதை மாணவிகளின் சாட்சியம் தெளிவாக கூறியுள்ளது. மாணவிகள் இந்த மூன்றுபேரையும் மிகத் தெளிவாக கோர்ட்டில் அடையாளம் காட்டியுள்ளனர்.
எனவே இந்த மூன்று பேரும்தான் இந்த சம்பவத்தில் நேரடிக் குற்றவாளிகள்.மற்றவர்கள் இந்த வன்முறையில் மறைமுகமாக சம்பந்தப்பட்டவர்கள்.
அரசுத் தரப்பில் விசாரிக்கப்பட்ட அனைத்து சாட்சிகளும் மிகத் தெளிவாக சாட்சியம்அளித்துள்ளனர். எனவே குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும்.
முதல் குற்றவாளி ராஜேந்திரன், 5வது குற்றவாளியிலிருந்து 31வது குற்றவாளி வரைஅனைவருக்கும் சேலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி ஆஜராகியுள்ளார். இவர்வேறு யாருமல்ல, சங்கரராமன் கொலை வழக்கில் விஜயேந்திரர், ரகுவுக்காகஆஜரானவர்தான் இவர்.
அதேபோல தா.கிருட்டிணன் கொலை வழக்கில் மு.க.அழகிரிக்காகவும் இவரேதான்ஆஜரானார்.
அதேபோல நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்காக சென்னையச்சேர்ந்த கந்தசாமி ஆஜராகியுள்ளார். இவர் கடந்த ஜெயலலிதா ஆட்சியில்,தா.கிருட்டிணன் கொலை வழக்கு, ஜெயேந்திரர் வழக்கு ஆகியவற்றில் அரசுத் தரப்புவழக்கறிஞராக ஆஜரானவர்.
ஆட்சி மாறியதும் தனது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்து விட்டார்.














Click it and Unblock the Notifications