நொய்டா கொலையாளிகளுக்கு மக்கள் தர்ம அடி!
காஸியாபாத்:டெல்லி அருகே நொய்டாவில் 30க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியரை கொடூரமாகக் கொன்று புதைத்தமொஹீந்தர் சிங், சுரேந்தர் கோலி ஆகியோரை வக்கீல்களும், பொதுமக்களும் சேர்ந்து இன்று சரமாரியாகஅடித்து உதைத்தனர்.
உ.பி. மாநிலம் நொய்டாவில் தொழிலதிபர் மொஹீந்தர் சிங் வீட்டிலிருந்தும் அருகில் உள்ள சாக்கடையிலிருந்தும்சமீபத்தில் ஏராளமான சிறுவர், சிறுமியரின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு நாட்டையே உலுக்கியது. இந்தசம்பவம் தொடர்பாக மொஹீந்தர் சிங், அவரது வீட்டு வேலையாள் சுரேந்தர் கோலி ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இருவரையும் சிபிஐ அதிகாரிகள் தங்களது காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இன்றுடன் அவர்களதுகாவல் முடிவடைந்தது. இதையடுத்து இருவரையும் காஸியாபாத்தில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தசிபிஐ அதிகாரிகள் அழைத்து வந்தனர்.
அவர்கள் வருவதை அறிந்ததும் அங்கு ஏராளமான பொதுமக்கள் திரண்டனர். வழக்கறிஞர்களும் அதிக அளவில்கூடியிருந்தனர். இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு வெளியே கூட்டி வந்தனர். அவர்களைசிறையில் அடைப்பதற்காக போலீஸார் கூட்டிச் செல்ல வந்திருந்தனர்.
இருவரையும் பார்த்ததும் கூடியிருந்த பொதுமக்கள் கோபாவேசமடைந்தனர். கோபத்துடன் மொஹீந்தர் மற்றும்சுரேந்தர் மீது பாய்ந்து சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்களுடன் வக்கீல்களும் சேர்ந்து கொண்டுபயங்கரமாக தாக்கினர்.
பாதுகாப்புக்கு குறைந்த அளவிலான போலீஸாரே இருந்ததால் இந்த சம்பவத்தைக் கட்டுப்படுத்த முடியாமல்அவர்கள் திணறினர்.
போலீஸாரை தள்ளி விட்டு இருவரையும் பொதுமக்கள் கடுமையாக தாக்கினர். நிலை தடுமாறி கீழே விழுந்தமொஹீந்தரை காலால் உதைத்தனர். கடுமையாக தாக்கப்பட்டதால் மொஹீந்தர் மயக்கமடைந்தார். உடனடியாகஇருவரையும் மீட்ட போலீஸார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications