சென்னை ராணுவ அதிகாரிக்கு கீர்த்தி சக்ரா!
சென்னை:காஷ்மீல் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் எதிரிகளுடன் மோதி வீர மரணமடைந்த 23 வயதானதமிழகத்தைச் சேர்ந்த ராணுவ அதிகாரி லெப்டினன்ட் பார்த்திபனுக்கு கீர்த்தி சக்ரா விருது வழங்கப்படுகிறது.
சென்னை பம்மல் பகுதியில் வசித்து வருபவர் முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் வி. நடராஜன். இவரது மகன்பார்த்திபன். தந்தையைப் போலவே ராணுவத்தில் சேர்ந்தார்.
பரங்கிமலையில் உள்ள ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பயிற்சியை முடித்தபார்த்திபன், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் பணியில் அமர்த்தப்பட்டார்.
பணியின்போது கடந்த அக்டோபர் மாதம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி ஊடுறுவ முயன்றதீவிரவாதிகளுடன் மோதல் நடந்தது. இதில் பார்த்திபன் வீர மரணமடைந்தார்.
பணியில் சேர்ந்து 7 மாதங்களிலேயே தீவிரவாதிகளுடன் மோதி மரணம் அடைந்த பார்த்திபனின் வீரத்தைப்பாராட்டும் வகையில் மரணத்திற்குப் பின்னர் வழங்கப்படும் கீர்த்தி சக்ரா விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு கீர்த்தி சக்ரா விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலேயே மிகவும் இளைய வயது கொண்டவர்பார்த்திபன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் விருதினை வழங்குகிறார்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications