விஜயகாந்த் வீட்டு ரெய்டு-பாஜகவின் சந்தேகம்
சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிலும், கட்சி அலுவலகத்திலும் வருமான வரிசோதனையை நடத்தியிருப்பது தவறான முன்னுதாரணம், அரசியல் உள்நோக்கம்கொண்டது என்று தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தேமுதிக மக்கள் ஆதரவு பெற்ற கட்சியாகவளர்ச்சி அடைந்து வருகிறது என்பது உண்மை. எதிர்காலத்தில் அது எப்படி இருக்கும்என்பதை கணிக்க முடியாது.
திமுக, அதிமுகவுக்கு மாற்றாக வளர்ந்துள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது. இந்தநேரத்தில் சோதனை நடத்தியிருப்பது சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகிறது.
தேர்தல் நேரத்தில் தேமுதிகவுக்கு நிதியுதவி அளித்தவர்களாக கூறப்படுபவர்களின்(ஜேப்பியார், கனகராஜ்) வீடுகளிலும் சோதனை நடத்தியிருப்பது இது அரசியல்உள்நோக்கம் கொண்டதுதான் என்ற சந்தேகத்தை மேலும் உறுதிப்படுத்துகிறது.
அரசியல் கட்சி அலுவலகத்தில் முதல் முறையாக வருமான வரி சோதனைநடத்தியுள்ளனர். இது மிகத் தவறான முன்னுதாரணம்.
சோதனை நடத்தப்பட்டதில் அரசியல் பின்னணி இருப்பதாக கூறியுள்ள பண்ருட்டிராமச்சந்திரன், பிறகு காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி என்று பேசியுள்ளார். இதுஎதிர்காலத்தில் சோதனையைத் தவிர்ப்பதற்காக என்றே கருதுகிறேன்.
அரசியல் உள்நோக்கம் இல்லை என்று அமைச்சர் பழனி மாணிக்கம் கூறினால்,கிடைத்த ஆதாரங்களை அவர் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலை பாஜக சந்திக்கும். மீண்டும் வன்முறை நடந்தால்அதையும் சந்திப்போம். ஆனால் தமிழக தேர்தல் ஆணையர் அந்தப் பொறுப்புக்குசற்றும் தகுதியவற்றவர். நீதிமன்றத் தீர்ப்புக்குத் தலைவணங்கி அவர் ராஜினாமாசெய்திருக்க வேண்டும். ஆனால் அவர் செய்யவில்லை.
தேர்தல் ஆணையரை மாற்றக் கோரி நீதிமன்றத்தில் பாஜக வழக்கு தொடரும்.இதுகுறித்து யோசித்து வருகிறோம், வக்கீல்களுடன் ஆலோசித்து வருகிறோம் என்றார்அவர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications