கேரளாவுடன் இனி பேச்சே இல்லை-துரைமுருகன்
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசுடன் பேசிப்புண்ணியம் இல்லை என்பதால் இனி பேச்சு நடத்துவதாக இல்லை என்று பிரதம>டம்தமிழக அரசு தெரிவித்து விட்டதாக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகன்கூறியுள்ளார்.
சட்டபையில் பூஜ்ய நேரத்தின்போது இதுகுறித்து காங்கிரஸ் உறுப்பினர்கள் பீட்டர்அல்போன்ஸ், ஞானசேகரன் ஆகியோர் எழுப்பிய கேள்விகளுக்கு துரைமுருகன்பதிலளிக்கையில்,
இதுதொடர்பாக பிரதமருக்கு முதல்வர் கருணாநிதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.அந்தக் கடிதத்தை நானே புதன்கிழமை பிரதமரிடம் ஒப்படைத்து தமிழகத்தின்நிலையையும் விளக்கினேன்.
இக்கடிதத்தின் நகல் மத்திய நீல்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸுக்கும்வழங்கப்பட்டது. இந்தப் பிரச்சினையைத் தீர்க்க மத்திய அரசு எடுத்துக் கொண்டமுயற்சிகளுக்கு தமிழக அரசு நன்றிக் கடன்பட்டுள்ளது. அதேசமயம், பேச்சுவார்த்தைமூலமாக சுமூகத் தீர்வு காண முடியாமல் போனது வருத்தம் தருகிறது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு தெளிவாக உள்ளது. 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்தநடவடிக்கை எடுக்க வேண்டும் என தெ>வித்துள்ளது. இந்த பணியிலும், அணையைப்பலப்படுத்தும் பணியிலும் தமிழக அரசு ஈடுபடுவதை கேரளா தடுக்கக் கூடாதுஎனவும் உச்சநீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் அடிப்படையிலும், மத்திய. அரசின் ஆலோசனைப் படியும்தான் 2சுற்றுப் பேச்சுவார்த்தை நடந்தது. பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழி, உச்சநீதிமன்றத்தீர்ப்பை அமல்படுத்துவற்கான வழி குறித்து பேசுவதற்குப் பதில், ஏற்கனவே முடியாதயோசனைகளை கூறி வந்தது கேரள அரசு.
எனவேதான் இனியும் பேசுவதற்குப் பதில், உச்சநீதிமன்றத்தை நாடுவது என்றமுடிவுக்கு தமிழக அரசு வந்தது. இதில் நாம் வென்று காட்டுவோம் என்றார்துரைமுருகன்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications