கேரளாவுக்குக் கடத்தப்பட்ட 8 மாணவிகள் மீட்பு
சேலம்:சேலம் வழியாக கேரளாவுக்கு எட்டு மாணவிகளை கடத்தி சென்ற பெண்ணை ரயில்வே போலீஸார் கைதுசெய்தனர்.
சேலம் ரயில் நிலையத்தில், ரயில்வே போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சேலம்,பாலக்காடு வழியாக மங்களூர் செல்லும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலுக்காக எட்டு மாணவிகளுடன் ஒருபெண் காத்திருந்தார்.
அவர் மீது சந்தேகம் அடைந்த ரயில்வே போலீஸார் அப் பெண்ணிடம் விசாரணை மேற்கொண்டனர். அதில்,விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சுத்தமலை பகுதியை சேர்ந்த அப்பெண்ணின் பெயர் லதா (23) எனதெரியவந்தது.
சுத்தமலை, மேலநந்தல் ஆகிய கிராமங்களிலிருந்து பெற்றோரின் ஒப்புதலுடன் கேரளாவுக்கு மாணவிகளை வீட்டுவேலைக்காக அழைத்து செல்வதாகவும் போலீஸா>டம் லதா தெரிவித்தார்.
அவருடன் இருந்த சுத்தமலை, மேலநந்தலை சேர்ந்த கீதா (11), ஜெயந்தி (13), அம்மு (15), வாசுகி (14), கவிதா(15), சுதா (17), பரமேஸ்வரி (14), கலைச்செல்வி (17) ஆகிய எட்டு மாணவிகளையும் ரயில்வே போலீஸார்மீட்டனர்.
பெற்றோரின் ஒப்புதலுடன் கேரளாவுக்கு லதா அழைத்து செல்கிறாரா? அல்லது மாணவிகளை கடத்திசெல்கின்றாரா? என ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
போலீஸாரால் மீட்கப்பட்ட மாணவிகள் எட்டு பேரும் சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள அரசினர் மகளிர்காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மாணவிகளின் பெற்றோர்கள் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்திய பின்னர் அவர்களிடம் மாணவிகளைஒப்படைக்க போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
லதாவை போலீஸார் கைது செய்தனர். இதுபோல அவர் எத்தனை பேரை கேரளாவுக்கு அனுப்பியுள்ளார் என்பதுகுறித்து மேல் விசாரணை நடந்து வருகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications