போதையில் எஸ்ஐ கழுத்தை நெரித்த ஏட்டய்யா!
புதுக்கோட்டை:போதை தலைக்கேற தனது உறவினருடன் மதுக் கடையில் ரகளை செய்த தலைமைக் காவலரை பிடிக்க முயன்றசப்இன்ஸ்பெக்டரின் கழுத்தை நெரித்தார் அந்த போலீஸ்காரர். பின்னர் பொதுமக்கள் உதவியுடன் மப்புஏறியபோலீஸ்காரரையும், உறவினரையும் போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.
புதுக்கோட்டை கியூ பிரிவு போலீஸில் டிரைவராக இருப்பவர் ராஜேந்திரன். இவர் தனது உறவினர் அந்தோணிஅருள்தாஸுடன் சந்தைப்பேட்டை அருகே உள்ள டாஸ்மாக் மதுக் கடைக்கு சரக்கடிக்க சென்றார்.
போதை அதிகமாகி இருவரும் உற்சாக பறவைகளாக மாறினர். இதையடுத்து மதுக் கடையில் ரகளையில்இறங்கினர்.பாரில் இவர்கள் செய்த ரகளையைப் பார்த்த மதுக் கடைக்காரர்கள் போலீஸுக்குப் போன் செய்தனர்.
சப் இன்ஸ்பெக்டர் வாசுதேவன், தலைமைக் காவலர் கருப்பையா ஆகியோர் விரைந்து இருவரையும் பிடிக்கமுயன்றனர்.ஆனால் அவர்களை தள்ளி விட்டு சண்டை போட்டுள்ளனர் இருவரும்.
இதையடுத்து இன்னொரு சப் இன்ஸ்பெக்டர் செளந்தரராஜன் அங்கு வந்தார். ராஜேந்திரனையும்,அந்தோணியையும் பிடித்து ஜீப்பில் ஏற்ற முயன்றார். அப்போது ஆத்திரமடைந்த ராஜேந்திரன், செளந்தரராஜன்கழுத்தைப் பிடித்து நெரிக்க ஆரம்பித்தார்.
இதைப் பார்த்த மற்ற போலீஸார், செளந்தரராஜனை, ராஜேந்திரனின் பிடியிலிருந்து மீட்டனர். போலீஸ்காரரைஅடக்க போலீஸ்காரர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்த பொதுமக்கள் உதவிக்கு வந்தனர். அத்தனைபேருமாக சேர்ந்து ராஜேந்திரனையும், அந்தோணி தாஸையும் தூக்கி ஜீப்புக்குள் போட்டனர்.
பின்னர் இருவரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீஸார் வழக்குப் பதிவு செய்து இருவரையும்கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications