குடியரசு தினம்-பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி:நாட்டின் 58வது குடியரசு தினம் இந்தியா முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் ஜனாதிபதி கலாம் காலை தேசிய கொடியை ஏற்றி வைத்துபிரமாண்டமான ராணுவ அணி வகுப்பை பார்வையிட்டார்.

குடியரசு தின சிறப்பு விருந்தினராக வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், துணைஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத், பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அமைச்சர்கள்,அனைத்துக் கட்சி தலைவர்கள் உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்தியாவின் முப்படை வலிமையை பறைசாற்றும் அணிவகுப்பு நடந்தது. இதில் இந்தியாவின் அதி நவீன ஏவுகணைகள்,டாங்குகள் உள்ளிட்டவை கம்பீரமாக அணி வகுத்து வந்தன.

பின்னர் இந்தியாவின் பாரம்பரியத்தை எடுத்துக் காட்டும் வகையில் பல்வேறு மாநிலங்களின் சார்பில் அலங்கார ஊர்திகள்இடம் பெற்றன. பள்ளி மாணவ, மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவையும் இடம் பெற்றன. இந்த நிகழ்ச்சிகளைபல்லாயிரக்கணக்கானோர் நேரில் பார்த்து மகிழ்ந்தனர்.

முன்னதாக ஜனாதிதியும் பிரதமரும் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு அமர்ஜவான் ஜோதியில் சென்று மலரஞ்சலி செலுத்தினர்.

குடியரசு தின விழாவை முன்னிட்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் டெல்லியில் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் ..

சென்னையில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில் ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா தேசியக் கொடியை ஏற்றினார்.

கடற்கரைச் சாலையில் நடந்த நிகழ்ச்சியில் காந்தி சிலை அருகே அமைக்கப்பட்டிருந்த சிறப்பு மேடையில் தேசியக் கொடியைஏற்றி வைத்த ஆளுநர் பர்னாலா, அணிவகுப்பு மரியாதையையும் ஏற்றுக் கொண்டார்.

பின்னர் தமிழக அரசின் பல்துறைகளின் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பும் நடந்தது. பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தகலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.

இந்த நிகழ்ச்சியில் முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா உள்ளிட்டோரும்கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் வீர தீர செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு அண்ணா பதக்கங்களை முதல்வர் கருணாநிதி வழங்கினார். மேலும்,சுனாமியில் சிக்கியவர்களை மீட்டவர்களுக்கு ஜீவன் ரக்ஷா பதக்கமும், மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்டவர்களுக்குகோட்டை அமீர் விருதும், கள்ளச் சாராய ஒழிப்புக்கு பாடுபட்டவர்களுக்கு காந்தி பதக்கமும் அவர் வழங்கினார்.

மாவட்டத் தலைநகரங்களில் ஆட்சித் தலைவர்கள் கொடியேற்றி வைத்து குடியரசு தின விழாவில் பங்கேற்றனர். மதுரை,கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகளில் மேயர்கள் கொடியேற்றி வைத்தனர்.

சென்னையில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் கிருஷ்ணசாமி தேசியக் கொடியேற்றி வைத்தார்.

குடியரசு தினத்தையொட்டி நாடு முழுவதுமே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+