அதிமுக அடிதடி-ஜெ. பேரவை கூட்டங்கள் ரத்து
சென்னை:தேனியில் தினகரன், மகாதேவன் ஆதரவாளர்களிடையே நடந்த பயங்கர அடிதடியைத் தொடர்ந்து, மகாதேவன்ஏற்பாடு செய்திருந்த மாவட்ட அளவிலான ஜெயலலிதா பேரவை செயல்வீரர்கள் கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது.
அதிமுகவில் சசியின் அண்ணன் மகன் மாகதேவனுக்கும், அக்காள் மகன் தினகரனுக்கும் இடையே கோஷ்டிப்பூசல் உச்சத்தை எட்டி வருகிறது. இரு தரப்பு ஆதரவாளர்களும் ஆங்காங்கே அடித்துக் கொள்ளஆரம்பித்துள்ளனர்.
ஜெயலலிதா பேரவை தலைவராக மகாதேவன் நியமிக்கப்பட்டது முதல் பேரவையினருக்குத்தான் அதிமுகவில்அதிக செல்வாக்காக உள்ளது. மற்றவர்களை மகாதேவன் கோஷ்டியினர் புறக்கணித்து வருகின்றனர்.
இந் நிலையில் மாவட்டந்தோறும் ஜெயலலிதா பேரவை செயல் வீரர்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார்மகாதேவன். மாவட்டந்தோறும் சென்று செயல் வீரர்கள் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசி வருகிறார்.
அந்த வகையில் தேனிக்கும் அவர் வந்தார். அப்போது கூட்டத்தில், பெரும் அமளி ஏற்பட்டது. தினகரன்ஆதரவாளர்களும், மகாதேவன் ஆதரவாளர்களும் சரமாரியாக மோதிக் கொண்டனர். இரு தரப்பினரும்கடுமையாக அடித்துக் கொண்டதால் தேனியே கிடுகிடுத்துப் போனது.
இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக தற்போது பேரவை செயல் வீரர் கூட்டங்கள் திடீரென ரத்துசெய்யப்பட்டுள்ளது. அதிமுக தலைமைக் கழகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில்,
3.1.2007 முதல் பல்வேறு மாவட்டங்களில் ஜெயலலிதா பேரவை செயல் வீரர் கூட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.5.2.2007 அன்று நடைபெறவுள்ள செயற்குழு, பொதுக்குழு கூட்டங்களை முன்னிட்டு ஏற்கனவேஅறிவிக்கப்பட்ட ஜெயலலிதா பேரவை செயல் வீரர் கூட்டங்கள் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகின்றன.
பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் முடிந்த பின்னர் மாற்று தேதிகளில் ஜெயலலிதா பேரவை கூட்டங்கள்நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications