பெண்களிடம் ரகளை-ராணுவ வீரர்கள் கைது
பாட்னா:ரயிலில் பெண் பயணிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு ரகளை செய்து ராணுவ வீரர்கள் உள்ளிட்ட 9 பேரைபோலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் இருந்து கெளஹாத்திக்கு வட கிழக்கு எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரயிலின்பொதுப் பெட்டியில், ராணுவ வீரர்கள் மற்றும் எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்.) வீரர்கள் பயணித்தனர்.
பீகார் மாநிலம், முகல்சராய் ரயில் நிலையத்திற்கு அந்த ரயில் வந்த போது சில பயணிகள் பொதுப் பெட்டியில்ஏறினர். குடிபோதையில் இருந்த ராணுவ வீரர்கள் இந்த பெட்டி "ரிசர்வ் செய்யப் பட்டுள்ளது. இதில், யாரும்ஏறக்கூடாது. கீழே இறங்குங்கள் என்று கூறினர்.
ஆனால் அந்தப் பெட்டி ரிசர்வ் செய்யப்படவில்லை என்பதால் பயணிகள் ராணுவ வீரர்களுடன் வாக்குவாதத்தில்ஈடுபட்டனர். அவர்களை மீறி ரயில் பெட்டியில் ஏறினர்.
இதனால் கோபமடைந்த வீரர்கள் பயணிகளை அடித்து உதைத்தனர். அவர்களின் பொருட்களை எடுத்துவெளியே வீசினர். சில வீரர்கள் பெண்களிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவத்தை பார்த்த ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் பக்சார் ரயில் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ரயில்பக்சார் வந்தபோது ரகளையில் ஈடுபட்ட நான்கு ராணுவ வீரர்கள், இரண்டு பி.எஸ்.எப். வீரர்கள் மற்றும் மூன்றுபேரை ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications