விஜயகாந்த்துக்கு வைகோ பதில் ஆறுதல்!!
நாகர்கோவில்:ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி வருமான வரி சோதனை நடத்தி தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைகொச்சைப்படுத்தியுள்ளனர் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
சட்டசபைத் தேர்தலுக்கு முன் வரை விஜயகாந்த்தும், வைகோவும் எதிரும் புதிருமாக இருந்தனர். விஜயகாந்த்தின்புதிய கட்சியை பொருட்டாகவே நினைக்கவில்லை என்ற ரீதியில் பேசி வந்தார் வைகோ. ஆனால் சமீப காலமாகஇருவரும் சாப்ட் ஆக மாறி வருகின்றனர்.
சமீபத்தில் மதிமுக உட்கட்சிக் குழப்பம் தொடர்பாக விஜயகாந்த் கருத்து தெரிவிக்கையில், இந்தப் பிரச்சினையைவைகோ தைரியமாக சமாளிக்க வேண்டும் என்று ஆறுதலாகப் பேசினார்.
தற்போது விஜயகாந்த்துக்கு பதிலுக்கு ஆறுதல் தரும் விதமாக வைகோ கருத்து தெரிவித்துள்ளார்.நாகர்கோவிலில், அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிலும், அவரது உறவினர் வீடுகளிலும், கட்சி அலுவலகத்திலும் ரெய்டுநடத்திய அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாகும். இது கொச்சைப்படுத்தும் செயல்.
அரசியல், அதிகாரத்தைப் பயன்படுத்தி இவ்வாறு செய்துள்ளனர். கட்சி அலுவலகத்தில் ரெய்டு நடத்திய இதுவரைநடந்திராத ஒரு சம்பவம். எங்கும் இப்படி நடந்ததில்லை.
எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகிய இரு மாஜிக்களும் எங்கள் கட்சியினரிடம் செய்தபோலி பிரசாரங்கள்அனைத்தும் திமுக தலைவர் வகுத்துக் கொடுத்த திட்டத்தின்படி நடந்தது.
மாஜிக்கள் 2 பேரும் மதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் பெயரை போலியாக, போர்ஜரி செய்து கையெழுத்துப்போட்டு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்வதற்கான வேலை நடக்கிறது.
போர்ஜரி கையெழுத்துப் போடுவது கிரிமினல் குற்றம். இதை நான் எளிதில் விட மாட்டேன். போர்ஜரிகையெழுத்துப் போட்டால் என்ன தண்டனையோ, அந்தத் தண்டனை கிடைக்க நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.
4 லட்சம் தர்றோம், 5 லட்சம் தர்றோம் என்று எங்கள் இயக்க பொதுக்குழு உறுப்பினர்களை அழைத்துள்ளனர்.ஆனால் அவர்கள் வசதி, வாய்ப்பற்றவர்களாக இருந்தாலும், இந்த அரசியல் வியாபாரத்துக்கு இடம்கொடுக்கவில்லை.
பொதுக்குழு உறுப்பினர்களில் 1,303 பேர் எங்களது பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள்அனைவரும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பிரமாண வாக்குமூலமும்வாங்கியுள்ளோம்.
சில நாட்களுக்கு முன்பு நிர்ப்பந்தத்தின் பேரிலும், ஆசை வார்த்தையாலும் எங்கள் மீது புகார் கூறிய 2 பேரும்பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள்.
இதுதவிர 36 மாவட்டச் செயலாளர்களில் 35 மாவட்டச் செயலாளர்களும், கண்ணப்பன் தலைமையிலான 6எம்.எல்.ஏக்களும், 2 பேரைத் தவிர மற்ற எம்.பிக்களும் எங்களுடன் உள்ளனர்.
இப்போது மக்கள் மத்தியில் ஒரு எண்ணம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணி வைக்காமல், திமுகவுடன்இருந்திருந்தால், அருகே வைத்தே எங்களை அழித்திருப்பார்கள் என்று பேசும் அளவுக்கு ஆகி விட்டது.
மதிமுகவின் கோவை மண்டல மாநாடு மார்ச் 16ம் தேதி கோவையில் நடைபெறும். இந்த மாநாட்டுக்கு மாநிலம்முழுவதிலும் இருந்தும் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்கவுள்ளனர் என்றார் வைகோ.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications