ஜனநாயக கட்சியின் எதிர்ப்பு: கடுப்பில் புஷ்!
வாஷிங்டன்:ஈராக் விவகாரத்தில் என்ன முடிவெடுக்க வேண்டும் என்பதை இறுதி செய்யும் அதிகாரம் எனக்கு மட்டுமேஉண்டு. இதை ஜனநாயகக் கட்சி எம்.பிக்கள் எதிர்ப்பது தவறானது என்று அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஆவேசமாக கூறியுள்ளார்.
புஷ்ஷின் ஈராக் கொள்கைக்கு அமெரிக்கர்களிடையே கடும் அதிருப்தி நிலவி வருகிறது. இது சமீபத்தில் நடந்தநாடாளுமன்றத் தேர்தலில் ஆணித்தரமாக வெளிப்பட்டது. ஜனநாயகக் கட்சி நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் பெரும்பான்மை பலத்தைப் பெற்றன. புஷ்ஷின் குடியரசுக் கட்சி தோல்வியைச் சந்தித்தது.
இத்தனை நடந்தும் புஷ் தனது ஈராக் கொள்கையை மாற்றிக் கொள்ள முன்வரவில்லை. ஈராக்கில் உள்ளஅமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்று வரும் நிலையில், கூடுதலாக 21ஆயிரத்து 500 வீரர்களை அனுப்ப புஷ் திட்டமிட்டுள்ளதற்கு அங்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
புஷ்ஷின் போக்கு அமெரிக்காவை தவறான பாதைக்குக் கொண்டு செல்வதாக உள்ளது என்று ஜனநாயகக்கட்சியும், செனட் சபையின் சபாநாயகரும், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவருமான நான்சி பெலோசிகடுமையாக கூறியுள்ளார்.
ஈராக்குக்கு கூடுதல் படைகளை அனுப்பும் புஷ் முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளிக்காதுஎன்றும் கூறப்படுகிறது. ஜனநாயகக் கட்சியின் இந்தப் போக்கு புஷ்ஷுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து புஷ் கூறுகையில், ஒரு விஷயத்தை அனைவரும் தெளிவாக உணர்ந்துள்ளனர். ஈராக்கில் அமெரிக்காதோல்வி அடைந்தால் அது நாட்டுக்கு பெரும் பாதகங்களை ஏற்படுத்தும் என்பதை அனைவரும்உணர்ந்துள்ளனர்.
ஈராக் விவகாரத்தில் நான் தான் முடிவு எடுக்கும் அதிகாரம் படைத்தவன். பேரழிவை தடுக்க நான் நினைக்கிறேன்.அதற்கான வழிகளை நான் தான் யோசிக்க வேண்டும்.
அதுதொடர்பான ஒரு முடிவை சொல்லும்போது அதை செயல்படுத்தக் கூட விடாமல் தடுக்க நினைக்கும் சிலரைநினைத்து எனக்கு ஆச்சரியமாகவும், அதிருப்தியாகவும் உள்ளது.
ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் மீது யார் தாக்குதல் நடத்தினாலும் அவர்களை எதிர்த்து பதில் தாக்குதல்நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
அமெரிக்க வீரர்களைக் குறி வைத்து ஈரானிய ரகசிய ஏஜென்டுகள் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகஅறிகிறேன். அப்படிச் செய்பவர்களை சுட்டுத் தள்ள அமெரிக்க படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நமது படையினரை யாரும் தாக்குவதை அனுமதிக்க முடியாது. ஈராக்கில் உள்ள அப்பாவிகளை கொல்வதன்மூலமாகவோ, நம்மைத் தாக்குவதன் மூலமாகவோ நமது லட்சியத்தைத் தடுக்க முயல்பவர்களை நாம் அனுமதிக்கமுடியாது.
நமது படையினரை நாம் காக்க வேண்டும். நமது லட்சியமும் நிறைவேற வேண்டும் என்றார் புஷ்.
இதற்கிடையே, ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைகளுக்கு தலைமை தாங்க புதிதாக நியமிக்கப்பட்டுள்ளராணுவத் தளபதி டேவிட் பெட்ரீஷியஸின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது.இதைத் தொடர்ந்து பெட்ரீஷியஸ், அதிபர் புஷ்ஷை சந்தித்து ஈராக் உத்தி குறித்து விரிவாக விவாதித்தார்.
இந்த நிலையில், செனட் சபாநாயகர் நான்சி பெலோசியின் தலைமையில், உண்மை அறியும் குழு ஒன்று பாக்தாத்சென்று ஈராக் அதிபர் நூர் அலி மாலிக்கி உள்ளிட்டவர்களை சந்தித்து ஈராக் விவகாரம் குறித்து விவாதித்தது.
இந்த சந்திப்பின்போது, ஈராக்கின் பாதுகாப்பு விவகாரத்தை ஈராக் அரசே பார்த்துக் கொள்ள வேண்டிய நேரம்வந்து விட்டதாக நான்சி பலோசி, ஈராக் அதிபரிடம் எடுத்துரைத்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications