விஜயகாந்த்திடம் கணக்கு கேட்கும் சந்திரசேகர்!
சென்னை: கலையுலகில் பொன் விழா கண்டதற்காக முதல்வர் கருணாநிதிக்கு திரையுலகம் நடத்திய பாராட்டு விழா தொடர்பான கணக்கை விஜயகாந்த்சொல்ல வேண்டும் என்று திமுகவைச் சேர்ந்த நடிகர் சந்திரசேகர் கோரியுள்ளார்.
வருமான வரிச் சோதனை தொடர்பாக முதல்வர் கருணாநிதியை விமர்சித்து தேமுதிக தலைவர், நடிகர் விஜயகாந்த் சமீபத்தில் கோபமான பேட்டிஅளித்திருந்தார். அதில் கருணாநிதிக்கு பொன் விழா கண்டதற்காக பாராட்டு விழா எடுத்த எனக்கு நல்ல கைமாறு செய்து விட்டார் என்றுகூறியிருந்தார்.
இதற்கு நடிகர் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சந்திரசேகர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கடந்த சில நாட்களாக விஜயகாந்த், தமிழக முதல்வர் மீது தமிழினமே வேதனைப்படும் அளவுக்கு வார்த்தைகளை நெருப்பாய் அள்ளி வீசுகிறார்.சொன்ன சொல்லையும், எறிந்த கல்லையும் திருப்பி அழைக்க முடியாது என்பது இங்கிலாந்து நாட்டுப் பழமொழி.
அரசியல்வாதியாய், அரசியல் களத்தில் நீங்கள் இருப்பது உங்கள் உரிமை. ஆனால், எதற்கெடுத்தாலும் உங்கள் தோல்விகளுக்கெல்லாம்தவறுகளுக்கெல்லாம் முதல்வரை காரணம் காட்டுவது சரியல்ல
கருணாநிதிக்கு பொன்விழா எடுத்தது நான், அதற்கு கைமாறு செய்துவிட்டார் என்று திரும்பத் திரும்ப கூறி வருகிறீர்கள். கருணாநிதிக்கு எடுத்தவிழா விஜயகாந்த் என்ற தனிமனிதன் எடுத்த விழா அல்ல. கலை உலகமே சேர்ந்து எடுத்த விழா.
1998ம் ஆண்டு திருச்சியில் திமுக மாநாடு நடந்தது. அதில் நான் பேசியபோது, அரசியலுக்கு அப்பாற்பட்டு கலைஞருக்கு கலை உலகம் மிகப்பெ>ய விழா எடுக்க வேண்டும் என்று பேசினேன். பின்னர் கலைஞரை சந்திக்கும் போதெல்லாம் கலையுலகில் பொன் விழா கண்டதற்காக அந்தசாதனையைப் பாராட்டி விழா எடுக்க ஒப்புதல் தர வேண்டும் என கோரினேன். ஆனால் அவர் அன்போடு மறுத்து விட்டார்.
இருந்தாலும் நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தியதால் அன்புத் தொல்லை தாங்க முடியாமல் ஒப்புதல் தந்தார். அதன் படி நான், இயக்குநர் ராம.நாராயணன், நடிகர் தியாகு, தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோருடன் சேர்ந்து உங்களை (விஜயகாந்த்) சந்தித்தோம்.
அப்போது நீங்கள் சொன்ன வார்த்தை என்ன தெ>யுமா? நானும் உங்களோடு சேர்ந்து கொள்கிறேன் என்று சொன்னீர்கள். ஆனால் என் நண்பன்இப்ராகிம் ராவுத்தர் சரி என்று சொல்ல வேண்டும் என்று பயந்து ஒதுங்கினீர்கள். பிறகு ராவுத்தரையும் நாங்கள் சந்தித்து, நாங்கள்தான் விழாஎடுக்கிறோம் என்றவுடன் எல்லோரும் சேர்ந்து எடுப்போம் என்றார்.
வருமான வரித்துறை அதன் வேலையைச் செய்கிறது. சட்டம் அதன் கடமையைச் செய்கிறது. இதில், எதற்காக கருணாநிதியை இழுக்கிறீர்கள்?உண்மை, சத்தியம் என்றெல்லாம் பேசும் விஜயகாந்தை கேட்கிறேன். பொன்விழா நடத்திய பிறகு பல லட்சம் ரூபாய் மிஞ்சியதே. அந்தப் பணம்எங்கே?
நீங்கள் உழைத்த பணத்திற்கு எப்போதும் கணக்கு உண்டு என்று கூறுகிறீர்கள். கருணாநிதிக்கு எடுத்த பொன்விழாவில் மிஞ்சிய பணத்திற்கு கணக்குஎங்கே?
கருணாநிதியைப் பார்த்து திருவாரூரிலிருந்து என்ன கொண்டு வந்தார் என்கிறீர்கள்? நீங்கள் பிறப்பதற்கு முன்பே திரை உலகில் மிகப் பெரியபுகழினைப் பெற்றவர் அவர். தேன் தமிழை உங்கள் நாவில் தடவி பேசவிட்டு அழகு பார்த்த அண்ணனுக்கு நீங்கள் செய்யும் கைமாறு இதுதானா?
அன்று தேன் தடவிய விரலில் இன்று தேளாய் கொட்டுகிறீர்கள். கருணாநிதியை தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதை இதோடு நிறுத்திக் கொள்ளவேண்டும் என்று கூறியுள்ளார் சந்திரசேகர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications