நின்றார் லாரா: வென்றது மே.இ. தீவுகள்!
சென்னை:கேப்டன் லாரா மற்றும் சாமுவேல்ஸ் ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவுக்கு எதிராக சென்னையில்நடந்த 3வது ஒரு நாள் போட்டியில், மேற்கு இந்தியத் தீவுகள் அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே சென்னையில் சனிக்கிழமை 3வது ஒரு நாள் கிரிக்கெட்போட்டி நடந்தது. டாஸ் வென்ற மேற்கு இந்தியத் தீவுகள் அணி கேப்டன் பிரையன் லாரா, இந்தியாவை முதலில்பேட் செய்ய பணித்தார்.
இதையடுத்து கெளதம் காம்பீரும், ராபின் உத்தப்பாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். ராபின்உத்தப்பா தொடக்கம் முதலே அடித்து ஆடினார். ஆனால் காம்பீர் ரன் ஏதும் எடுக்காத நிலையில் ஆட்டமிழந்தார்.இருப்பினும் உத்தப்பாவின் அதிரடி ஆட்டத்தால் ரன் மழை பொழிந்தது.
அதிரடியாக ஆடிய உத்தப்பா 41 பந்துகளில் 70 ரன்களை எடுத்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினார். அதன்பிறகு வந்த சச்சின் டெண்டுல்கரும், ராகுல் டிராவிடும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அதே சமயம் ரன்குவிப்பிலும் ஈடுபட்டனர்.
சச்சின் சிறப்பாக ஆடி 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டிராவிட் 57 ரன்களை எடுத்தார். முன்னணி வீரர்கள்சிறப்பாக ஆடியதால் இந்தியா 300 ரன்களைத் தாண்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நடுக்கள வீரர்கள்மற்றும் பின்னால் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகவே இந்தியா 50 ஓவர்களைக் கூட முடிக்கமுடியாமல், 48வது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 268 ரன்களில் ஆட்டமிழந்துரசிகர்களை ஏமாற்றி விட்டது.
இதையடுத்து 269 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு இந்தியத் தீவுகள் அணி களமிறங்கியது.ஆரம்பத்திலேயே அஜீத் அகர்கர், மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணி ரன் ஏதும் எடுத்திராத நிலையில், தொடக்க ஆட்டக்காரர் கெயில் அவுட் ஆனார்.அவரைத் தொடர்ந்து 1 ரன் எடுத்திருந்த மார்ட்டனும், அகர்கர் பந்தில் வெளியேறினார்.
இதனால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை எளிதில் சுருட்டி விடலாம் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால்அதில் மண்ணை அள்ளிப் போடுவது போல சாமுவேல்ஸும், லாராவும் இந்தியப் பந்து வீச்சாளர்களை துவம்சம்செய்து ரன்களை வாரி சுருட்டினர்.
குறிப்பாக சாமுவேல்ஸ் படு அபாரமாக ஆடி ரன்களைக் குவித்தார். 98 ரன்களை சாமுவேல்ஸ் எடுத்து அவுட்ஆனார். அவரும் லாராவும் இணைந்து 128 பந்துகளில் 127 ரன்களை சேர்த்தனர். லாரா சிறப்பாக ஆடி 88ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இந்தியப் பந்துவீச்சை குறிப்பாக அகர்கர் மற்றும் ஸ்ரீசந்த் ஆகியோரின் பந்துகளை மேற்கு இந்திய அணி வீரர்கள்பதம் பார்த்தனர். சாமுவேல்ஸ் படு ஆக்ரோஷமாக ஆடினார். அவரைப் போலவே லாராவும் பின்னி எடுத்தார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் அதிரடி ஆட்டத்தால் 15.1 ஓவர்களில் அந்த அணி 100 ரன்களை எட்டியது.20.4 ஓவர்களில் 150 ரன்களைத் தாண்டியது. 29.3 ஓவர்களில் 200 ரன்களைத் தாண்டியது.
வெற்றிக்கு சில ரன்களே தேவை என்ற நிலையில், கடைசி நேரத்தில் லாரா உள்ளிட்ட 3 விக்கெட்டுகள் 12பந்துகளில் அவுட் ஆனதால், ரசிகர்களுக்கு ஓரளவு நம்பிக்கை பிறந்தது. ஜெயிக்கக் கூடிய வாய்ப்புகள்இருப்பதாக அவர்கள் நினைத்தனர். ஆனாலும், கடைசி வரிசை ஆட்டக்காரர்கள் படு நிதானமாக விளையாடஆரம்பித்ததால் அந்த கனவும் பலிக்கவில்லை.
டேவோன் ஸ்மித் 33 ரன்கள் எடுத்தார். இறுதியில் 43.4 ஓவர்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி 7விக்கெட்டுகளை மட்டும் இழந்து 270 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது.
இந்தியத் தரப்பில் அகர்கர் மட்டுமே 3 விக்கெட்டுகளை எடுத்தார். 4வது ஒரு நாள் போட்டி பரோடாவில்நடைபெறுகிறது.
பர்னாலா, ரஜினி ரசித்தனர்:
நேற்று நடந்த போட்டியை தமிழக ஆளுநர் பர்னாலா, மனைவியுடன் நேரில் பார்த்து ரசித்தார். சூப்பர் ஸ்டார்ரஜினிகாந்த் தனது குடும்பத்துடன் வந்து போட்டியைப் பார்த்தார்.
ரஜினியுடன் அவரது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, செளந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோரும்வந்திருந்தனர். ரஜினி, லதாவைத் தவிர மற்றவர்கள் இந்திய வீரர்கள் அணிவதைப் போன்ற உடையுடன்வந்திருந்து உற்சாகமாக போட்டியைப் பார்த்து ரசித்தனர்.
இதேபோல டிஜிபி முகர்ஜி, அமைச்சர் பொன்முடி, முன்னாள் நீதிபதி மோகன், கூடுதல் டிஜிபி நடராஜ் உள்ளிட்டபிரபலங்களும் போட்டியைப் பார்த்து ரசித்தனர்.
சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியை ரசிகர்கள் படு உற்சாகமாக ரசித்துப் பார்த்தனர். கடந்தமுறை தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டி ஆகியவை மழைகாரணமாக நடக்கவில்லை.
இதனால் அதிருப்தியில் இருந்த சென்னை ரசிகர்களுக்கு நேற்று பெய்த ரன் மழை படு ஜாலியைக் கொடுத்தது.இந்திய வீரர்கள் எடுத்த ஒவ்வொரு ரன்னுக்கும், பவுண்டரிக்கும், சிக்ஸருக்கும் படு உற்சாகமாக கோஷம் எழுப்பிசந்தோஷித்தனர்.












Click it and Unblock the Notifications