சொத்து-மாஜி அதிமுக எம்எல்ஏவுக்கு சிறை
சென்னை:வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ தேனி பன்னீர் செல்வத்திற்கு 3 ஆண்டுசிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனையை நிறுத்தி வைத்த நீதிமன்றம், பன்னீர்செல்வம் மற்றும் அவரது இரு மனைவிகளுக்கு ஜாமீன் வழங்கியது.
தேனி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருந்தவர் பன்னீர்செல்வம். இவர் கடந்த 1992ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரைவருமானத்திற்கு அதிகமாக ரூ. 21.36 லட்சம் அளவுக்கு சொத்து சேர்த்ததாக கூறி லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சென்னைதனி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் கடந்த 1997ம் ஆண்டு பன்னீர்செல்வத்தின் மனைவிகள் ஜானகி, தனபாக்கியம் ஆகியோரும் குற்றவாளிகளாகசேர்க்கப்பட்டனர். கடந்த 2003ம் ஆண்டு நவம்பர் 4ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
80க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். இதையடுத்து இன்று நீதிபதி தட்சிணாமூர்த்தி தீர்ப்பு வழங்கினார்.இதையொட்டி தனது 2 மனைவிகளுடனும் பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பின்னர் நீதிபதி அளித்த தீர்ப்பில் பன்னீர் செல்வத்திற்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ. 10 ஆயிரம் அபராதம்விதிக்கப்பட்டது. இரு மனைவிகளுக்கும் தலா 1 ஆண்டு சிறைத் தண்டனை மற்றும் ரூ. 5000 அபராதம் விதிக்கப்பட்டது.
மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக நீதிபதி அறிவித்தார்.
இதையடுத்து பன்னீர் செல்வம் சார்பில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை ஏற்ற நீதிபதி ரூ. 20 ஆயிரம் ரொக்கம்மற்றும் இரு நபர் உத்தரவாதத்தின் பேரில் பன்னீர் செல்வம் மற்றும் அவரது மனைவிகளை ஜாமீனில் விடுவித்து உத்தரவிட்டார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications