20 பட்ஜெட் ஹோட்டல்கள் கட்டும் ரயில்வே
டெல்லி:டெல்லியில் 2010ம் ஆண்டு நடைபெறும் காமன்வெல்த் போட்டியை முன்னிட்டு, நாடு முழுவதும் 20 இடங்களில்குறைந்த செலவிலான பட்ஜெட் ஹோட்டல்களைக் கட்ட ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.
தலைநகர் டெல்லியில் 2010ம் ஆண்டு காமன்வெல்த் போட்டிகள் நடக்கின்றன. இந்தப் போட்டியைக் காணஇந்தியாவில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் டெல்லிக்கு வருவர்.
விளையாட்டு போட்டியை காண வரும் நடுத்தர வர்க்கத்தினர் தங்குவதற்காக 20 பட்ஜெட் ஒட்டல்களைகட்டுவதற்கு ரயில்வே துறை முடிவெடுத்துள்ளது. இதற்காக 100 இடங்கள் கண்டறியப்பட்டு அவற்றை ரயில்வேஅமைச்சகத்துக்கு சுற்றுலாத்துறை பரிந்துரை செய்துள்ளது.
அவற்றில் ஹோட்டல் கட்ட பொருத்தமான 20 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இந்த இடங்களில்ஹோட்டல்கள் கட்ட டெண்டர் விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறுகையில், நட்சத்திர ஒட்டல்களில் தங்கவேண்டுமானால் ரூ. 90,000 செலவாகும். அதிக தொகை கொடுத்து தங்க விரும்பினாலும் அவர்களுக்குஅறைகள் கிடைப்பதில்லை. இந்தியாவில் ஓட்டல் அறைகளுக்கு தட்டுப்பாடு உள்ளது.
காமன்வெல்த் போட்டியின் போது நாடு முழுவதும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் அறைகள் தேவைப்படும். இதில்டெல்லியில் மட்டும் 30,000 அறைகளுக்கு பற்றாக்குறை ஏற்படும்.
சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் நடுத்தர வர்க்கத்தினர். எனவே குறைந்த செலவிலான பட்ஜெட்ஒட்டல்களை கட்டும் திட்டத்தில் அரசுடன் தனியார் நிறுவனங்கள் ஒத்துழைக்க வேண்டும்.
ஒட்டல் அறைகளுக்கு ஏற்பட்டுள்ள தட்டுபாட்டின் அவசர நிலையை புரிந்து கொண்டு மத்திய நிதி அமைச்சர்சிதம்பரம் பட்ஜெட் ஒட்டல்கள் கட்டுவோருக்கு வரிச் சலுகைகள் அளிப்பார் என்று நம்புகிறேன் என்றார் சோனி.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications