விஜய்காந்த் ரெய்டு: தப்பேயில்லை-ராமதாஸ்
சென்னை:சென்னை நகரில் பள்ளிக் கூடங்கள் அருகே விறுவிறுப்பாக நடக்கும் கஞ்சா விற்பனையைத் தடுக்காமல்,போதைப் பொருள் தடுப்புப் போலீஸ் பிரிவு சீரழிந்து, செயலிழந்து நிற்கிறது என்று பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ் காட்டமாக குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் சென்னை பள்ளிக்கூடங்கள் அருகே கஞ்சா, அபின் போன்ற போதைப் பொருட்கள் சகஜமாகவிற்கப்படுவதாக ராமதாஸ் குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து சட்டசபையில் பாமக எம்.எல்.ஏ.வேல்முருகனும் காட்டமாக குற்றம் சாட்டினார்.
இதையடுத்து சென்னை போலீஸார் அவசரம் அவசரமாக கஞ்சா வேட்டையில் இறங்கினர். இருப்பினும் இந்தகஞ்சா வேட்டை தற்போது நடப்பது போலத் தெரியவில்லை.
இந்த நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ராமதாஸ் மீண்டும் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். அவர் கூறுகையில்,
சென்னையில் உள்ள முக்கியமான, மிகப் புகழ் பெற்ற, ஆங்கில வழிக் கல்வியைப் போதித்து வரும் 3 முக்கியப்பள்ளிகளின் முன்பாக கஞ்சா விற்பனை படு விறுவிறுப்பாக நடக்கிறது.
இது போலீஸாருக்கும் தெரியும். ஆனால் அவர்கள் அதை தடுக்காமல், வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளனர்.அந்தப் பள்ளி மாணவர்களிடம் கஞ்சா விற்கப்படுவதை தடுக்க போலீஸார் முயற்சிக்கவில்லை.
போதைப் பொருள் போலீஸ் பிரிவில் பறக்கும் படையெல்லாம் வைத்திருக்கிறார்கள். ஆனால் அந்தப் பிரிவேஇப்போது ஊழல் மலிந்து, சீர்கெட்டு, சீரழிந்து, செயலிழந்து கிடக்கிறது என்றார்.
விஜயகாந்த் உள்ளிட்டோர் இருப்பிடங்களில் நடந்த வருமான வரி சோதனை குறித்த கேள்விக்கு ராமதாஸ்பதிலளிக்கையில், சுய நிதிக் கல்லூரிகள் என்ற பெயரில் கல்லூ>களை நடத்துகிறவர்கள், கோடி கோடியாககொள்ளை அடிக்கிறார்கள். இவர்களிடம் பல ஆயிரம் கோடி ரூபாய் புழக்கத்தில் உள்ளது. இது எல்லோருக்கும்தெரிந்த உண்மை, பரம ரகசியம் கிடையாது.
எனவே இதுபோன்ற சோதனையில் தவறு இல்லை, இது தாமதமான நடவடிக்கை. இவர்களைப் போல நிறையபேர் உள்ளனர் என்றார்.
சென்னை மாநகராட்சி இடைத் தேர்தலில் ஏற்கனவே போட்டியிட்டவர்கள்தான் மீண்டும் போட்டியிடுவார்கள்.சென்னை உயர்நீதிமன்றத்தில், நீதிபதிகளாக தமிழகத்தைச் சேர்ந்தவர்களே அதிகம் பேர் இடம் பெற வேண்டும்.வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் ராமதாஸ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications