ஆயிரம் விஜய்காந்துகள் வருவார்கள்: கேப்டன்
திருச்சி:ஒரு விஜயகாந்தை அழிக்க நினைத்தால் ஆயிரம் விஜயகாந்துகள் உருவாவார்கள் என அவரே கூறியுள்ளார்.
சமீபத்தில் தேமுதிகவில் இணைந்த மாஜி அதிமுக மந்திரி பொன்னுசாமியின் மகள் திருமண விழாவில்விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]() |
நிகழ்ச்சியில் விஜய்காந்த் பேசுகையில்,
நான் கட்சி ஆரம்பித்தபோது 500 ஓட்டு வாங்குவானா, 1000 ஓட்டு வாங்குவானா என்று கேலி பேசினார்கள்.ஆனால் 8.33 சதவீத ஓட்டுக்கள் வாங்கியபோது, 3வது இடத்தில் இருக்கிறோம் என்று தெரிய வந்தபோது,எப்படியெல்லாம் என்னை அழிக்கலாம் என துடிக்கின்றனர். ஆனால் அது முடியாது.
எப்படி எம்.ஜி.ஆர். கட்சி ஆரம்பித்தபோது அவருக்கு சொந்தமான சத்யா ஸ்டுடியோவை கருணாநிதி முடக்க சதிசெய்தாரோ, அதேபோல் எனது கல்யாண மண்டபத்தை முடக்க சதி செய்கின்றனர்.
வருமான வரித் துறையினர் எனது வீட்டில் நடத்திய சோதனை உள்நோக்கம் கொண்டது என்பதால் தான்எதிர்க்கிறேன். வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை செய்வதை நான் எதிர்க்கவில்லை.
அதேவேளை, ரகசியமாக நடத்தப் படும் சோதனை காலையிலேயே திமுக ஆதரவு தொலைக்காட்சியில்காட்டப்பட்டது அமைச்சர் பழனிமாணிக்கத்தின் தகவலின் அடிப்படையில் என்பதால் தான். இதனால் தான் இந்தசோதனை உள்நோக்கம் கொண்டது என்று கூறுகிறேன்.
சோதனையில் பல கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியானதாக பொய்யான செய்தி அவர்கள்டிவியில் மட்டுமே ஒளிபரப்பானது. மடியில் கனமில்லை, வழியில் பயமில்லை என்பது போல் சோதனைக்குநாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுத்தோம்.
பழிவாங்கும் அரசியல் செய்து எனக்கு பழக்கமில்லை. ஆனால், திமுகவின் நடவடிக்கை, நாளைக்கு நான்ஆட்சியில் உட்கார்ந்தால் பழிவாங்கும் எண்ணத்தை தூண்டும் விதமாக உள்ளது.
மூத்த அரசியல்வாதிகள் இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டியாக விளங்க வேண்டும். பழிவாங்கும்அரசியல் போக்கால் உங்களின் சந்ததிகள் தான் பாதிக்கப்படுவர். விஜயகாந்த் பெயரை களங்கப்படுத்தஎடுக்கப்படும் நடவடிக்கைகளால் எனக்கு மக்கள் மத்தியில் ஆதரவு தான் கூடுகிறது.
ஜெர்மனியின் ஹிட்லர் ஆட்சிக்கு பின் உலக சரித்திரத்தில், முதன்முறையாக தேமுதிக கட்சி அலுவலகத்தில்வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர். இதுபோன்று சோதனை திமுக அலுவலகமானஅறிவாலயத்தில் நடத்தப்படுமா?
எனது வருமான வரிக்கணக்கில் மாறுபாடு இருக்கிறது என்கின்றனர். இந்தியா முழுவதும் உள்ளஎம்.எல்.ஏக்களின் வருமான வரி கணக்கை சோதிக்க அதிகாரிகள் தயாரா?
ராஜினாமா செய்த 99 கவுன்சிலர் வார்டுகளில் அராஜகம் மூலம் வெற்றி என்பதை ஒப்புக் கொண்டுள்ள நீங்கள்,அந்த தேர்தலை நடத்திய தமிழக தேர்தல் ஆணையர் சந்திரசேகரன், டி.ஜி.பி. முகர்ஜி, சென்னை கமிஷனர்லத்திகா சரண் ஆகியோர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
தற்போது செயல்படுத்தப்படும் நலத் திட்டங்கள் அடித்தட்டு மக்களை போய் சென்றடையவில்லை. இலவச கலர்டிவி மற்றும் கேஸ் அடுப்பு ஆகியவற்றில் ஆளும்கட்சிக்கு ஆதாயம் இருப்பதால் திட்டங்கள்செயல்படுத்தப்படுகின்றன.
வேலை இல்லாதவர்களுக்கு உதவித் தொகை தருவதாக சொல்கிறார்கள். தொடர்ந்து அதை வழங்க முடியாமல்திணறப் போகிறார்கள். அதற்குப் பதில் குடும்பத்துக்கு ஒரு வேலையைக் கொடுங்கள். டிவி கொடுக்கிறார்களாம்.அப்படியானால் இலவசமாக கேபிள் இணைப்பும் கொடுங்கள்.
ஆனால் அதை இலவசமாக கொடுக்க மாட்டார்கள். காரணம், அந்த கேபிள் இணைப்புக்கான கட்டணம்அவர்களது குடும்பத்திற்குத்தானே செல்கிறது. காஸ் அடுப்பு இலவசமாக கொடுக்கிறார்கள். ஆனால் மாதம் 300ரூபாய் கொடுத்தால்தான் சிலிண்டர் கிடைக்கும். அதேசமயம், மண்ணெண்ணை அடுப்பு இருந்தால் மாதம் 180ரூபாய்தான் செலவாகும். 120 ரூபாய் மக்களுக்கு மிச்சமாகும். கமிஷன் பெறத்தான் இலவச அடுப்புகொடுப்பதாக அறிவிக்கிறார்கள்.
பழிவாங்கும் அரசியல் போக்கை பார்த்து தொண்டர்கள் துவண்டு விடக்கூடாது. அடுத்து நிச்சயமாக நாம்ஆட்சியை பிடிப்போம். சினிமாவில் ஹீரோவாக என்னை பார்த்தவர்களுக்கு அரசியலுக்கு வந்த பிறகுவில்லனாக தெரிகிறேன்.
யாராயிருந்தாலும் எவ்வளவு கோடிகள் சம்பாதித்தாலும் கடைசியில் போவது என்னமோ ஆறுக்கு மூன்றில் தான்.நான் எனது சொத்துக்கணக்கை ஏற்கனவே காட்டிவிட்டேன். கருணாநிதியின் அருகில் உள்ள அவரது 40குடும்பத்தினரின் சொத்து கணக்கை வெள்ளை அறிக்கையாக விடத் தயாரா?
எனது சொத்துக்கள் அனைத்தையும் ஏழைகளுக்கு நான் எழுதி வைக்கிறேன். அதுபோல் நீங்களும் சொத்தைஎழுதித்தர தயாரா? தேர்தலின் போது மிடாசில் ஊழல் என்று முழங்கி விட்டு, தற்போது ஆட்சிக்கு வந்தபின்அங்கிருந்து இன்னும் மதுவகைகள் கொள்முதல் செய்ய காரணம், அவர்களுக்குள் உள்ள பிசினஸ்அன்டர்ஸ்டான்டிங் தானே.
ஒரு விஜயகாந்தை அழிக்க நினைத்தால் மக்களால் உருவாக்கப்பட்ட தேமுதிகவிலிருந்து ஆயிரம்விஜயகாந்துகள் உருவாவர். என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அது முடியாது.
என்னைப் பயமுறுத்த முடியாது. நான் வருகிறேன், ஒவ்வொரு ஊராக வருகிறேன். ஒருபோதும் பின் வாங்கமாட்டேன். தனியாக நின்று, தனியாளாக சாதிப்பேன் என்றார் விஜயகாந்த்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?













Click it and Unblock the Notifications