பாலாறு அணை: ஆந்திராவுக்கு ஜெ. கண்டனம்
சென்னை:பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டினால் தமிழகத்தின் ஐந்து மாவட்டங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணை கட்ட முயற்சிப்பது மிகவும் கவலைக்குரிய ஒன்று. இந்த நடவடிக்கையால் தமிழகத்தின் வட மாவட்ட விவசாயிகள் கடும் பாதிப்புக்குள்ளாவார்கள்.
ஐந்து வட மாவட்டங்களிலும் விவசாயப் பணிகள் கடுமையாக பாதிக்கப்படும். பெரும் பொருளாதார நெருக்கடியும் ஏற்படும். வறட்சியால் விவசாயிகள் கடும் சிரமத்திற்குள்ளாக நேரிடும். இதன் மூலம் அவர்களது வாழ்க்கை மிகப் பெரிய கேள்விக்குறியாகி விடும்.
பிப்ரவ> 1ம் தேதி அணை கட்டுவதற்கான பூமி பூஜைக்கு ஆந்திர அரசு ஏற்பாடு செய்துள்ளது. ஆனால் முதல்வர் கருணாநிதி இதுகுறித்து அக்கறையே இல்லாமல் மெத்தனமாக இருக்கிறார்.
பக்கத்து மாநிலங்களுடனான நதி நீர்ப் பங்கீட்டுப் பிரச்சினைகளில் அவரது நடவடிக்கைகள் மிகவும் மந்த கதியாகவும், பொறுப்பற்ற தனமாகவும் உள்ளது.
கர்நாடகத்திலிருந்து காவிரி நீரைப் பெறும் பிரச்சினையாகட்டும், முல்லைப் பெரியாறு அணையில் நீரைத் தேக்கி வைக்கும் பிரச்சினையாகட்டும், இப்போது பாலாற்றுப் பிரச்சினையாகட்டும், எல்லாவற்றிலும் அவர் தோல்வி அடைந்து விட்டார்.
தமிழக விவசாயிகளும், மக்களையும் கடுமையாக பாதிக்கும் இந்தப் பிரச்சினைகளில் மத்திய அரசும், தமிழக திமுக சிறுபான்மை அரசும் படு மெத்தனமாக நடந்து வருவது கண்டனத்துக்கு>யது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க இரு அரசுகளும் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை.
பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் முயற்சியை ஆந்திர அரசு கைவிட வேண்டும். இல்லாவிட்டால் பாலாற்று வடிநிலம் முழுவதும் பாலைவனமாகி விடும் அபாயம் உள்ளதாக ஜெயலலிதா கூறியுள்ளார்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications