ராமர் ப(ா)லம்-மீட்க வைந்த கிரேனும் காலி
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே ராமர் பாலத்தை உடைக்க முயன்று உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்ட கருவியை மீட்கவந்த கிரேனும் உடைந்தது. இதனால் சேது சமுத்திரத் திட்டத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்ட கடலை ஆழப்படுத்தும் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. பாக் ஜலசந்தியில்தற்போது ஆழப்படுத்தும் வேலைகள் நடந்து வருகின்றன.
இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையே அமைந்துள்ள ராமர் பாலம் எனப்படும் ஆதாம் பாலத்தை (தீவுத்திட்டுக்களால் ஆன நீண்ட பாறை) உடைக்கும் முயற்சிகள் சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
பாலத்தை உடைப்பதற்காக அதி நவீன சிஎஸ்டி அக்வாரிஸ் என்ற கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கப்பலில்உள்ள தோண்டும் கருவி 50 டன் எடை கொண்டது. இதை வைத்துத்தான் ராமர் பாலத்தை உடைக்க முயன்றனர்.
ஆனால் முதல் இடிப்பிலேயே இக்கருவி உடைந்து கடலில் மூழ்கி விட்டது. இதனால் உடைப்புப் பணிநிறுத்தப்பட்டது. கடலில் விழுந்த கருவியை மீட்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.
சென்னையிலிருந்து 150 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும் சக்தி கொண்ட ராட்சத கிரேன் கொண்டுவரப்பட்டது. இந்த கிரேன் கடலில் விழுந்த பகுதியை மேலே கொண்டு வரும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டது.ஆனால் இப்போது இந்த கிரேனும் உடைந்து விட்டது.
ஏற்கனவே விழுந்த கருவியோடு, தற்போது ராட்சத கிரேனும் கடலில் விழுந்து விட்டது. இதனால் அதிகாரிகள்குழப்பமடைந்துள்ளனர். தற்போது விசாகப்பட்டனத்திலிருந்து 200 டன் எடையுள்ள பொருட்களைத் தூக்கும்இன்னொரு கிரேன் வரவழைக்கப்படவுள்ளது.
ஒரு வேளை கருவியை தோண்டி எடுத்து கப்பலில் பொருத்தி சரி செய்ய முடியாவிட்டால் அக்வாரிஸ் கப்பல்,கொச்சி துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு சரி செய்யப்படும்.
புராதண காலத்தில் ராமரால் போடப்பட்ட பாலம் என்பது ஐதீகம். இதனால் இந்த பாலத்தை உடைக்கக் கூடாதுஎன பாஜக, இந்து முன்னணி, அதிமுக மற்றும் பல இந்து அமைப்புகள் ஆகியவை கோரிக்கை விடுத்துவருகின்றன.
அதேபோல சுப்பிரமணியம் சுவாமியும் ராமர் பாலத்தை இடிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந் நிலையில்பாலத்தை இடிக்க முயன்ற கருவி உடைந்ததும், அதை மீட்க முயன்ற கிரேன் உடைந்ததும் பரபரப்பைஏற்படுத்தியுள்ளன.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications