அதிமுக, மதிமுக இணைப்பா?-வைகோ மறுப்பு
சென்னை:அதிமுகவுடன், மதிமுகவை இணைக்கப் போவதாக எல்.கணேசனும், சொஞ்சி ராமச்சந்திரனும் சொல்லியிருப்பதுதவறானது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பதில்மனுவில் தெரிவித்துள்ளார்.
கட்சிப் பதவிகளிலிருந்து தங்களை நீக்கியதை எதிர்த்து எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் சென்னைஉயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், நீக்கத்திற்கு இடைக்காலத் தடைவிதித்தது.
மேலும், கடந்த 10ம் தேதி பொதுக்குழுவில் தங்களை நிரந்தரமாக நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாதுஎன்றும், பொதுக்குழுக் கூட்டம் செல்லாது என அறிவிக்குமாறும் கோரி இருவரும் மனு செய்தனர்.
இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு கூறி வைகோவுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நோட்டீசுக்குவைகோ பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மதிமுக துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராக இருந்தவர் செஞ்சி ராமச்சந்திரன். கட்சியின் பொதுச்செயலாளர் பிறப்பிக்கும் உத்தரவைத்தான் அவர் அமல்படுத்த வேண்டும். அதிமுகவுடன் கூட்டணி சேரவேண்டும் என்று கட்சியின் 15வது பொதுக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதை எல்.கணேசன்தான்முன்மொழிந்தார். வைகோதான் இந்த முடிவை எடுத்தார் என்று, தான் கொண்டு வந்த தீர்மானத்துக்கு எதிராகஅவர் கூறுவது உள்நோக்கம் கொண்டது.
அதேபோல அதிமுகவின் வெற்றிக்குப் பாடுபடவேண்டும் என்று 2வது தீர்மானத்தைக் கொண்டு வந்தவரும்செஞ்சி ராமச்சந்திரன்தான். மக்கள் நலனை விட பொடா சட்டத்தின் கீழ் நான் துன்புற்றது முக்கியம் அல்ல, எனதுதனிப்பட்ட நலன்களை விட தமிழக மக்களின் நலனைத்தான் நான் பெரிதாக நினைக்கிறேன்.
மத்திய அமைச்சர்களாக கணேசன், செஞ்சியும் பதவி ஏற்க விரும்பினர். அவர்களது நோக்கம் நிறைவேறவில்லை.மத்திய அமைச்சரவையில் பங்கு கொள்வது இல்லை என்று பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவில் இருவரும்அதிருப்தி அடைந்தனர்.
இதனால் கட்சிக்கு களங்கம் ஏற்படுத்த அவர்கள் தொடங்கி விட்டனர். கட்சியின் அவைத் தலைவர் கட்சிக்காகபணியாற்ற முடியவில்லை என்றால் கூட்டத்துக்கு பொதுச்செயலாளர் தலைமை தாங்கலாம் என கட்சி விதிஉள்ளது. எனவே அவைத் தலைவர் இல்லாமல் வேறு யாரும் கூட்டத்துக்குத் தலைமை தாங்க அதிகாரம் இல்லைஎன்று கூறுவது சரியல்ல.
கடந்த 10ம் தேதி நடந்த பொதுக்குழுக் கூட்டத்தில் இவர்கள் இருவரும் பொறுப்புகளிலிருந்துநீக்கப்பட்டுள்ளனர். நான் மதிமுகவை அதிமுகவுடன் இணைக்க முயற்சி செய்வதாக கூறப்படும் குற்றச்சாட்டுமுழுக்கப் பொய்யானது. எனக்கு ஆதரவாக 2 எம்.பிக்கள், 6 எம்.எல்.ஏக்கள், 1,300 பொதுக்குழு உறுப்பினர்கள்உள்ளனர். நான் கட்சியின் பொதுச் செயலாளராக தொடர்ந்து செயல்படுவேன்.
எனவே இந்த வழக்கைத் தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார் வைகோ. இந்த மனு மீதானவிசாரணையை பிப்ரவரி 7ம் தேதிக்கு நீதிபதி நாகப்பன் தள்ளி வைத்தார்.












Click it and Unblock the Notifications