ஆசிரியரைக் குத்திக் கொன்ற மாணவர் கைது
விருதுநகர்:விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை என்ற ஊரில் பள்ளிக் கூடத்தில் வைத்தே ஆசிரியரைப் படுகொலை செய்த மாணவரை போலீஸார் கைதுசெய்தனர்.
ஏழாயிரம்பண்ணையில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் அக்கவுண்டன்சி ஆசிரியராகப் பணியாற்றி வந்தவர் செல்வராஜ் (45). இப்பள்ளியில்கடந்த ஆண்டு பிளஸ் டூ படித்தவர் ஜெயகணேஷ். 18 வயதாகும் கணேஷ், சரியாக படிக்கவில்லை. இதனால் ஆசிரியர் செல்வராஜ் அவரைதிட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த கணேஷ் படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார். இருந்தாலும் செல்வராஜ் மீது அவருக்கு ஆத்திரம் தீரவில்லை. அவரைப்பழிவாங்க உறுதி பூண்டார்.
நேற்று பள்ளிக்கூடத்தில் செல்வராஜ் பிளஸ்டூ மாணவர்களுக்கு டியூஷன் வகுப்பு நடத்திக் கொண்டிருந்தார். வகுப்பை முடித்து விட்டுஆசிரியர்களுக்கான ஓய்வறையில் அவர் அமர்ந்திருந்தார்.
அப்போது ஜெயகணேஷ் அங்கு வந்தார். செல்வராஜை நெருங்கிய அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக செல்வராஜைகுத்தினார்.
ரத்த வெள்ளத்தில் மிதந்த செல்வராஜை ஆசிரியர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர்பரிதாபமாக இறந்தார்.
செல்வராஜைக் கொலை செய்து விட்டுத் தப்பிய முன்னாள் மாணவர் ஜெயகணேஷை போலீஸார் கைது செய்தனர். அறிவுரை சொல்லித் திட்டியஆசிரியரை மாணவர் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications