கிரிக்கெட் தொடரை வென்றது இந்தியா
வதோதரா:மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான கடைசி ஒரு நாள் போட்டியில் அபார வெற்றியைப் பெற்ற இந்தியா, ஒரு நாள் தொடரையும் வென்றது.
இந்திய, மேற்கு இந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் இரு போட்டிகளில் இந்தியா வென்றது. சென்னையில் நடந்த 3வது போட்டியில்மேற்கு இந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. நேற்று 4வது போட்டி வதோதரா நகரில் நடந்தது.
இப்போட்டியில் வென்றால் தொடரை வெல்லலாம் என்பதால் இந்திய வீரர்கள் முனைப்புடன் போட்டியை சந்தித்தனர். டாஸ் வென்ற மேற்குஇந்தியத் தீவுகள் அணி கேப்டன் லாரா, இந்தியாவை முதலில் பேட்டிங் செய்யப் பணித்தார்.
கங்குலியும், ராபின் உத்தப்பாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதல் பந்திலிருந்தே அடித்து ஆட ஆரம்பித்தனர்.ராபின் உத்தப்பா சிறப்பாக சிறப்பாக ஆடி வந்த நிலையில், பொவல் பந்தில் ஆட்டமிழந்தார். 28 ரன்களை அவர் எடுத்தார்.
கங்குலி தொடர்ந்து சிறப்பாக ஆடி 68 ரன்களைக் குவித்தார். அவருக்குப் பின்னர் வந்த கேப்டன் டிராவிடும், சச்சின் டெண்டுல்கரும் இணைந்துஅணியை வலுவான நிலைக்குக் கொண்டு சென்றனர்.
டிராவிட் நிதானமாக ஆடி விக்கெட் சரிவை தடுத்து நிறுத்தி 78 ரன்களைக் குவித்தார். சச்சின் டெண்டுல்கர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 100ரன்களை குவித்தார். வழக்கமான சச்சினாக நேற்று மாறிய டெண்டுல்கர் மின்னல் வேக ஆட்டத்தைக் காட்டி ரசிகர்களை குஷிப்படுத்தினார்.
20 பந்துகளை மட்டுமே சந்தித்த டோணி 40 ரன்களை விளாசித் தள்ளினார். இறுதியில், 50 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 341ரன்களை சேர்த்தது இந்தியா.
பின்னர் ஆட வந்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆரம்பத்திலிருந்தே தடுமாற்றத்தோடு ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கெய்ல் 6ரன்களில் வீழ்ந்தார். சந்தர்பால் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். சுமித் கொஞ்சம் சமாளித்து ஆடி 24 ரன்களை சேர்த்து அவுட் ஆனார்.
வ>சையாக முன்னணி வீரர்கள் ஆட்டமிழந்த நிலையில் சாமுவேல்ஸ் மட்டும் நிலைத்து ஆடி ரன்களை சேர்க்க .யன்றார். சிறப்பாக, பொறுப்பாக ஆடியஅவர் 55 ரன்களை சேர்த்தார்.
அவருக்குத் துணையாக விக்கெட் கீப்பர் திணேஷ் ராம்தின் 40 ரன்களை சேர்த்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். இறுதியில், 41.4ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 181 ரன்களில் மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட்டமிழந்தது.
இதனால் 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் போட்டித் தொடரையும் இந்தியாவென்றது.
நேற்றைய ஆட்டத்தின் நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் சச்சின் டெண்டுல்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications