கடத்தப்பட்ட தமிழக என்ஜீனியர் உயிருடன் மீட்பு
விருதுநகர்:அஸ்ஸாமில் தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்ட தமிழக பொறியாளர் கணேசனை, ராணுவம் பத்திரமாக மீட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்துள்ள விஜயகரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். பொறியாளரான இவர் அஸ்ஸாமில் உள்ளராணுவப் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
![]() |
இவருக்கு ரதிதேவி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். கடந்த டிசம்பர் 22ம் தேதி கணேசன், பணி முடிந்து திரும்பிக்கொண்டிருந்தபோது உல்ஃபா தீவிரவாதிகளால் கடத்திச் செல்லப்பட்டார்.
கணேசனை விடுவிக்க வேண்டுமானால் ரூ. 3 கோடி பணம் கொடுக்க வேண்டும் என கணேசனின் வீட்டுக்குப் போன் செய்து தீவிரவாதிகள்மிரட்டினர்.
கணேசனை மீட்கும் பணியில் முதலில் அலட்சியம் காட்டப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து ரதிதேவி தனது குடும்பத்தாருடன் சென்னைக்கு வந்துமுதல்வர் கருணாநிதியை பார்த்து கண்ணீர் மல்க மனு கொடுத்தார். இதைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலுக்கு முதல்வர்கடிதம் எழுதி விரைந்து நடவடிக்கை எடுக்கக் கோரினார்.
மேலும், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் உதவியினால் ரதிதேவி டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு ராணுவ உயர் அதிகாரிகளைநேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ராணுவத்தின் மீட்பு நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டது. கணேசனை தீவிரவாதிகள் எங்கு மறைத்து வைத்துள்ளனர் என்பதுகுறித்து தீவிரமாக கண்காணித்து வந்த ராணுவம் சில நாட்களுக்கு முன்பு பூடான் எல்லை அருகே கணேசன் வைக்கப்பட்டிருக்கும் இடத்தைஅறிந்தது.
அங்கு கணேசன் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்திக் கொண்ட பின்னர், ராணுவம் அப்பகுதியை முற்றுகையிட்டது. உள்ளூர் போலீஸாரும் உடன்வந்தனர். தாங்கள் முற்றுகையிடப்பட்டதை அறிந்த தீவிரவாதிகள் கணேசனை விட்டு விட்டு அங்கிருந்து தப்பினர்.
இதையடுத்து கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார். அவரது கண்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தன. பின்னர் பூடானில் உள்ள இந்திய ராணுவஅலுவலகத்திற்கு கணேசன் அழைத்துச் செல்லப்பட்டார்.
அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். கணேசன் பத்திரமாக மீட்கப்பட்ட விவரத்தை ராணுவ அதிகாரிகள் ரதிதேவிக்குத் தொலைபேசிமூலம் தெரிவித்தனர்.
கணேசனும், ரதிதேவி மற்றும் குழந்தைகள் குடும்பத்தினருடன் பேசினார். இதனால் அவரது குடும்பத்தினர் நிம்மதி அடைந்தனர். விஜய கரிசல்குளம்கிராமமும் மகிழ்ச்சி அடைந்தது. அலுவல் ரீதியான விசாரணைகள் முடிந்த பின்னர் இன்னும் ஒரு வாரத்தில் ஊர் திரும்பவுள்ளதாக கணேசன்தெரிவித்துள்ளார் என ரதிதேவி தெரிவித்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்













Click it and Unblock the Notifications