தேசிய விளையாட்டு: சாந்திக்கு இடமில்லை!
சென்னை:அஸ்ஸாம் தலைநகர் கவுஹாத்தியில் நடைபெறவுள்ள 33வது தேசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழக தடகள அணியில்வீராங்கனை சாந்தி சேர்க்கப்படவில்லை.
கவுஹாத்தியில், 33வது தேசிய விளையாட்டுப் போட்டி வருகிற 9ம் தேதி தொடங்குகிறது. இப்போட்டியில் கலந்து கொள்ளும் தமிழக தடகள அணிஅறிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 40 பேர் இடம் பெற்றுள்ள இதில், 20 பேர் வீரர்கள், 20 பேர் வீராங்கனைகள். இதில் சாந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
சமீபத்தில் தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் வென்றார் சாந்தி. ஆனால் பாலின சோதனையில் அவர்தோல்வி அடைந்ததாக கூறப்பட்டது. இதனால் பெரும்சர்ச்சை எழுந்தது.
இந்த நிலையில், தமிழக அணியில் சாந்திக்கு இடம் கொடுக்கப்படவில்லை.
சாந்தி அணியில் இடம்பெறாதது குறித்து தமிழக அமெச்சூர் தடகள சங்கத்தின் செயலாளர் நீலசிவலிங்கசாமி கூறுகையில், முதலில் சாந்தியின் பெயர்சேர்க்கப்பட்டிருந்தது. ஆனால் இந்திய தடகள சம்மேளனத்திலிருந்து அவரது பெயரை நீக்குமாறு கோரி கடிதம் வந்தது.
ஏன் நீக்க வேண்டும் என்ற காரணத்தை அவர்கள் தெரிவிக்கவில்லை. இருப்பினும் அவர்களின் உத்தரவுப்படி சாந்தியின் பெயரை நீக்கியுள்ளோம்என்றார்.
பாலின சர்ச்சையைப் பொருட்படுத்தாமல், சாந்தியின் சாதனையைப் பாராட்டி தமிழக அரசு சாந்திக்கு பரிசு வழங்கி கெளரவித்தது. ஆனால் தமிழகஅணியில் அவருக்கு வழங்கப்பட்ட இடத்தை இந்திய தடகளச் சங்கம் தடுத்துள்ளது.
கேரளாவைச் சேர்ந்த அஞ்சு பாபி ஜார்ஜ், தமிழக அணியில் இடம் பெற்றுள்ள நிலையில், தமிழகத்தைச் சேர்ந்த சாந்திக்கு அணியில் இடம் இல்லைஎன்பது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications