அகதிகள் படகுகளை சுட்டுப் பிடித்த கடற்படை

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:இலங்கையிலிருந்து தமிழ் அகதிகளை அழைத்து படகுகளை இந்தியக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் தடுத்து நிறுத்தினர்.

இலங்கையில் மீண்டும் பதட்ட நிலை அதிகரித்திருப்பதால் அங்கிருந்து தமிழர்கள் மீண்டும் தமிழகத்துக்கு அதிக அளவில் வரத்தொடங்கியுள்ளனர்.

திரிகோணமலை, வவுனியா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 52 தமிழர்கள், அகதிகளாக 3 மீன் பிடி படகுகளில் தனுஷ்கோடியை நோக்கி வந்துகொண்டிருந்தனர்.

இவர்களை வானில் ரோந்துப் பணியில் இருந்த இந்திய கடற்படையினர் பார்த்து, ராமேஸ்வரம் கடற்படை கட்டுப்பாட்டுத் தளத்துக்குத் தகவல்கொடுத்தனர்.

இதைத் தொடர்ந்து கடற்படை ரோந்துப் படகில் கடற்படை வீரர்கள் விரைந்தனர். படகுகளை நோக்கி வந்த அவர்களைப் பார்த்து பயந்து போனபடகோட்டிகள், தனுஷ்கோடி கரையில் அகதிகளை இறக்கி விட்டு விட்டு தப்ப முயன்றனர்.

ஆனால் அவர்களை துப்பாக்கி முனையில் கடற்படையினர் தடுத்து நிறுத்தினர். வானை நோக்கி கடற்படையினர் ஒரு ரவுண்டு சுட்டனர். இதனால்பயந்த ஒரு படகோட்டி கடலில் குதித்தார். இதில் அவருக்கு படுகாயம் ஏற்பட்டது.

பின்னர் அகதிகளுடன் படகுகளை சுற்றி வளைத்த கடற்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர். விசாரணைக்குப் பின்னர் 52அகதிகளையும் தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

அவர்களை படகுகளில் அழைத்து வந்த படகோட்டிகளான இலங்கையைச் சேர்ந்த மிக்டர், ஸ்டாலின், நிர்மலன் உள்ளிட்ட 6 பேரை போலீஸார்கைது செய்தனர்.

அகதிகள் அனைவரும் விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+