அதிமுக அவைத் தலைவராக மதுசூதனன் தேர்வு!!!
சென்னை:யாரும் எதிர்பாராத வகையில் அதிமுகவின் அவைத் தலைவராக முன்னாள் அமைச்சர் மதுசூதனன் தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழுக் கூட்டம் இன்று காலை சென்னை அருகே வானகரத்தில்தொடங்கியது. வானகரம் ஸ்ரீவாரி வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் இதற்காக சிறப்பு ஏற்பாடுகள்செய்யப்பட்டிருந்தன.
கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொண்டர்கள் உற்சாகமாகவரவேற்றனர். யானை அணிவகுப்பு, தாரை தப்பட்டை, செண்டை மேளங்கள் முழங்க ஜெயலலிதாவுக்குபிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர் மண்டப நுழைவாயிலில் முன்னாள் அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுக நிர்வாகிகள்பூங்கொத்து கொடுத்து ஜெயலலிதாவை வரவேற்றனர்.
அதன் பின்னர் ஜெயலலிதா தலைமையில், செயற்குழுக் கூட்டம் தொடங்கியது. முதலில் புதிய அவைத்தலைவராக மதுசூதனனை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை .ன்மொழிந்தார் ஜெயலலிதா. அதை அதிமுக தேர்தல்பிரிவு செயலாளர் ஓ.பன்னீர்செல்வம் வழி மொழிந்தார்.
இதையடுத்து செயற்குழு உறுப்பினர்கள் ஒரு மனதாக மதுசூதனை அவைத் தலைவராக தேர்ந்தெடுத்தனர்.பின்னர் மதுசூதனனுக்கு ஜெயலலிதா பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
அதன் பின்னர் மதுசூதனன் தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து நடந்து வருகிறது.பொதுக்குழுக் கூட்டத்தில், மதுசூதனன் தேர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் மதுசூதனன். தெலுங்கரான மதுசூதனன்,வட சென்னை அதிமுகவின் அசைக்க முடியாத சக்தியாக ஒரு நேரத்தில் விளங்கியவர். தற்போதும் கூட வடசென்னையில் மதுசூதனன் வலுமிக்கவராகவே விளங்கி வருகிறார்.
இவரது உறவினர்தான் தற்போதைய சென்னை ராதாகிருஷ்ணன் நகர் அதிமுக எம்.எல்.ஏ. பி.கே.சேகர்பாபுஎன்பது குறிப்பிடத்தக்கது.
அவைத் தலைவராக இருந்த காளிமுத்து மறைந்த காரணத்தால் புதிய அவைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்டவேண்டியதாயிற்று.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications