விவசாயிகளுக்கு இனி கண்ணீர் தான் சொந்தம்-ஜெ

Subscribe to Oneindia Tamil

சென்னை:காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு நியாயமானதல்ல, இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை தமிழக அரசு உடனடியாக அணுக வேண்டும் என்று அதிமுகபொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து ஜெயலலலிதா இன்று வெளியிட்டுள்ள தீர்ப்பு:

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தீர்ப்பை -முழுமையாக பெற்றுத் தர -முடியவில்லை. நடுவர் மன்றத்தின்தீர்ப்பு தமிழகத்திற்கு பாதகமாக வந்துள்ளது. இதற்கு தார்மீகப் பொறுப்பேற்று திமுக அரசு ராஜினாமா செய்ய வேண்டும்.

தீர்ப்பின்படி பார்த்தால் இடைக்காலத் தீர்ப்பில் சொல்லப்பட்ட 205 டிஎம்சி தண்ணீரை விட குறைவாகவே தரப்பட்டுள்ளது. ஆனாலும் இதனைநியாயப்படுத்தி அரசு சார்பில் இன்று செய்தி வெளிவந்துள்ளது. தீர்ப்பு மகிழ்ச்சி தருகிறது என்று கருணாநிதியும் தெரிவித்துள்ளார்.

இனி தமிழக விவசாயிகளுக்கு தண்ணீர் சொந்தமில்லை, கண்ணீர்தான் சொந்தம்.

தமிழ்நாட்டுக்கு கர்நாடகத்திடமிருந்து கிடைக்க வேண்டிய 192 டிஎம்சி தண்ணீரில் இருந்து 7 டிஎம்சி தண்ணீரை நாம் புதுச்சே-ரிக்குத் தர வேண்டும்என்று கூறப்பட்டுள்ளது.

அதைக் கழித்தால் கர்நாடகம் நமக்குத் தர வேண்டியது 185 டிஎம்சி தண்ணீர்தான். ஆக இடைக்காலத் தீர்ப்பில் உள்ள 205 டிஎம்சி தண்ணீரை விடஇறுதித் தீர்ப்பில் 20 டிஎம்சி தண்ணீர் குறைவாகவே தரப்பட்டுள்ளது. இது கருணாநிதிக்கு மகிழ்ச்சி தருகிறதாம்.

மேற்படி தீர்ப்பில் கேரளாவுக்கு 30 டிஎம்சி தண்ணீர் தரப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அவ்வளவு தண்ணீரைப் பெறக் கூடிய அளவிலோஅல்லது பயன்படுத்தக் கூடிய அளவிலோ கேரளாவில் விவசாய நிலங்களோ அல்லது ஆயக்கட்டோ இல்லை. இந்தத் தண்ணீர் வீணாககடலுக்குத்தான் போய்ச் சேரவுள்ளது.

திமுக அரசுடன் ஒட்டி உறவாடிக் கொண்டிருக்கிற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் அங்கு ஆட்சி செய்கிறது. ஏற்கனவே முல்லைப் பெரியாறுவிஷயத்தில் நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்ற பிறகும் கூட எதையும் செய்ய முடியவில்லை. அதே நிலைதான் இங்கும்.

கேரளாவுக்குத் தரப்படும் 30 டிஎம்சி தண்ணீர் வீணாகி கடலில் கலப்பதை தடுக்க இயலாது. அதை விட மிகப் பெரிய அநியாயம், தமிழ்நாட்டின்நீராதாரமாக உள்ள பவானி ஆற்றிலிருந்து 6 டிஎம்சி தண்ணீர் கேரளாவுக்குப் போகப் போகிறது. பவானிசாகர் விவசாயிகள் இனி வஞ்சிக்கப்படப்போகிறார்கள்.

ஆக, தமிழ்நாட்டில்தான் எல்லா தரப்பு விவசாயிகளும் நீரின்றித் தவிக்கப் போகிறார்கள். இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்க தீர்ப்பு அல்ல.உச்சநீதிமன்றத்தை உடனடியாக அணுகுவதுதான் ஒரே வழி.

அப்படி இந்தப் பிரச்சினை உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றபோது அற்ப மகிழ்ச்சியே போதும் என்று இல்லாமல், ஆக்கப்பூர்வமானநடவடிக்கையாக, தனக்குப் பயனுள்ள இலாகாக்களை கேட்டுப் பெற்றுக் கொண்டது போல, மத்திய அரசை வற்புறுத்தி மாநிலங்களுக்குஇடையேயான நதி நீர் பிரச்சினை சட்டம் 1956ல் கண்டுள்ள பிரிவு 6ன்படி மத்திய அரசிதழில் உடனடியாக இந்தத் தீர்ப்பு வெளியிட நடவடிக்கைஎடுக்க வேண்டும்.

அத்தோடு நில்லாமல், மேற்படி தீர்ப்பில் சொல்லியுள்ளபடி, ஒரு கண்காணிப்புக் குழுவை மத்திய அரசு நதி நீர் ஆணையம் மூலமாக நியமனம்செய்து, மேற்படி தீர்ப்பில் உள்ள அட்டவணையின்படி ஒவ்வொரு மாத நீர்ப் பங்கீட்டையும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்ஜெயலலிதா.

அதிமுகவுக்கு மாறு வேடத்தில் வந்த தோல்வி:

முன்னதாக நேற்று அதிமுக பொதுக் குழுவில் ஜெயலலிதா பேசியதாவது:

திமுக பொதுக் குழு கூட்டம் நடந்தால் யாரும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. உன்னிப்பாக கவனிப்பதும் இல்லை. ஆனால், அதிமுக பொதுக்குழு என்றால் அனைவரும் ஆர்வத்துடன் பார்க்கின்றனர்.

போராட்டம் அறிவிக்கப் போகிறதா, சிறை நிரப்பும் போராட்டம் அறிவிக்கப் போகிறதா என்று இந்தியாவே எதிர்நோக்குகிறது (ஆகா...). நாம்எப்போது காத்திருக்க வேண்டும். எப்போது செயலாற்ற வேண்டும் என்பது நமக்கு தெரியும். ஒவ்வொரு அனுபவமும் நமக்கு சொல்லி தந்துள்ளது.

அவசரப்படாமல் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும். வெற்றி என்பது ஒரு பயணம். வெற்றி நோக்கி நாம் சென்றுக் கொண்டிருக்கவேண்டும். வெற்றி, தோல்வி என்பது நிரந்தரமல்ல. வெற்றி பெறுவதற்கு துணிவு தான் முக்கியம். பொறுத்தார் பூமியாள்வார்.

ஒவ்வொரு தடவையும் நாம் கீழே விழுந்த பிறகு மீண்டும் எழுந்து நிற்கிறோம். அதை தான் நாம் பெருமையாக கருத வேண்டும். தோல்விமரணத்திற்கு ஒப்பானதல்ல. துரதிஷ்டம் மாறுவேடத்தில் வரும். தற்காலிக தோல்வியும் அதேபோலத்தான்.

இன்று நாம் எதிர்க்கட்சியாக இருக்கிறோம். ஐந்தாண்டு கால ஆட்சியில் நாம் எந்த தவறும் செய்யவில்லை. மக்களுக்கும் நம் மீது எந்த கோபமும்இல்லை. இரவும் பகலும் மாறி மாறி வருவது இயற்கையின் நியதி. இருளுக்கு பிறகு வெளிச்சம் வந்தே தீரும். இப்போது தமிழகத்தில் இருள்சூழ்ந்துள்ளது. விரைவில் வெளிச்சம் வரும்.

விசுவாசம், நம்பிக்கைக்கு மறுபெயர் தான் மதுசூதனன். அவர் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் நடத்தினார். பின்னர் நற்பணி மன்றமாக மாற்றினார்.பொறுமையாக அவர் இருந்ததால் அவருக்கு அவைத் தலைவர் பதவி கிடைத்தது. எனவே, கட்சித் தோழர்கள் பொறுத்திருந்தால் சிறப்பானஎதிர்காலம் காத்திருக்கிறது.

திமுக ஆட்சியில் பல தவறுகள் நடக்கிறது. செய்வதெல்லாம் தவறு தான். முதல் கோணல் முற்றிலும் கோணல் போல் தமிழக அரசு திவாலாகும்சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மலையிலிருந்து கீழ் நோக்கி வரும் பிரேக் இல்லாத வண்டியாக திமுக இருக்கிறது. விரைவில் நிலை தடுமாறி, தீப்பிடித்துசுக்கு நூறாக நொறுங்கி விழப் போகிறது.

89ம் ஆண்டு திமுக ஆட்சியில் இருந்த போது கஜானாவை காலி செய்தது. 91ம் ஆண்டு முதல் 96ம் ஆண்டு வரை நடந்த நமது ஆட்சியில்பொருளாதாரத்தை உயர்த்தினோம். உபரி பட்ஜெட்டெல்லாம் தாக்கல் செய்தோம். 96ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை திமுக ஆட்சி நடந்தபோது உலக வங்கியே கடன் தர மறுத்தது. பணப்புழக்கமும் இல்லை.

2001ம் ஆண்டு முதல் 2006ம் ஆண்டு வரை மீண்டும் பொருளாதாரத்தை உயர்த்திக் கொடுத்தோம். ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்திதந்தோம். தமிழகத்தை இந்தியாவின் முதல் மாநிலமாக திகழ வைத்தோம். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு மைனாரிட்டி திமுக அரசுஎதற்கெடுத்தாலும் இலவசம் என்று அறிவிக்கிறது.

இது போல் பைத்தியக்காரத்தனமான ஆட்சி இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் நடக்கவில்லை. நாம் ஆட்சி செய்யும் போது விளக்கு ஏற்றிவைக்கிறோம். திமுக ஆட்சியில் மண்ணை அள்ளி போடப்படுகிறது. மீண்டும் நாம் ஆட்சிக்கு வந்த பிறகு மண்ணை அகற்றுகிறோம்.

இரண்டு ரூபாய்க்கு கொடுக்கும் அரிசியில் புழு, வண்டு ஓடுகிறது. அதில் துர்நாற்றம் வீசுகிறது. ரப்பர் மாதிரி அரிசி இழுக்கிறது என்று ஏழைத்தாய்மார்கள் வருத்தப்படுகின்றனர். அந்த அரிசி சாதத்தில் சாம்பார் ஊற்றி சாப்பிட்டால் சாப்பிட முடியாது. மீன் குழம்பு ஊற்றினால் தான் சாப்பிடமுடியுமாம்.

தினமும் மீன் குழம்பு செய்வதற்கு ஏழை தாய்மார்களால் எப்படி செலவு செய்ய முடியும்? மாட்டுத் தீவனம் 8 ரூபாய்க்கு விற்கப்படுவதால் அதைவாங்க முடியாது என்பதால் இந்த அரிசியை தீவனமாக மாட்டுக்கு போடுகின்றனர். மாடுகள் கூட முரண்டு பிடித்துக் கொண்டு அந்த அரிசியைசாப்பிட முடியாது என்கிறது என்றார் ஜெயலலிதா.

இக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள், எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என 1,850 பொதுக் குழு உறுப்பினர்களும், 200 செயற்குழு உறுப்பினர்களும்,சிறப்பு அழைப்பாளர்களும் கலந்து கொண்டனர்.

ஆனால், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்களுக்கு அழைப்பு அனுப்பப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+