3வது நீதிபதியின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சென்னை:சென்னை மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பான வழக்கில் 3வது நீதிபதி பி.கே.மிஸ்ராவின் விசாரணை முடிவடைந்தது. தீர்ப்பு தேதிகுறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
சென்னை மாநகராட்சிக்கு கடந்த அக்டோபர் மாதம் நடந்த தேர்தலின்போது பெரும் வன்முறை நடந்தது. இந்த வன்முறைக்கு திமுகவினர்தான்காரணம், எனவே நடந்த தேர்தலை ரத்து செய்து விட்டு 155 வார்டுகளுக்கும் மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோரி அதிமுக, மதிமுகஉள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்தன.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் முகோபாத்யாயா, இப்ராகிம் கலிபுல்லா ஆகியோர் ஆளுக்கு ஒரு தீர்ப்பு கொடுத்தனர். இதனால் இறுதித்தீர்ப்பை அறிய 3வது நீதிபதியாக பி.கே.மிஸ்ராவை தலைமை நீதிபதி ஏ.பி.ஷா அறிவித்தார்.
நீதிபதி பி.கே.மிஸ்ரா கடந்த சில நாட்களாக இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்தார். அவரது விசாரணை நேற்றுடன் முடிந்தது. இந்தவிசாரணையின் போது, திமுக, அதிமுக, மதிமுக, பாஜக, தமிழக அரசு, மாநில தேர்தல் ஆணையம் ஆகியவற்றின் சார்பில் வக்கீல்கள் ஆஜராகிவாதாடினர்.
விசாரணையின்போது ஏற்கனவே இரு நீதிபதிகள் கொடுத்த தீர்ப்புகளில் ஏதாவது ஒன்றை ஒட்டித்தான் தீர்ப்பு வழங்கப்படுமே தவிர புதிதாக 3வதுஒரு தீர்ப்பை தன்னால் கூற இயலாது என்று நீதிபதி மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
நான்கு நாட்கள் நடந்த விசாரணை நேற்றுடன் முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதி ஒத்திவைத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications