நாஞ்சில் சம்பத் கூட்டத்தில் திமுக ரகளை
சென்னை:சென்னை அருகே பொழிச்சலூரில் மதிமுக சார்பில் நடந்த பொதுக் கூட்டத்தில் புகுந்த திமுகவினர் கூட்டதில் பேசிக் கொண்டிருந்த மதிமுக கொள்கைவிளக்க அணிச் செயலாளர் நாஞ்சில் சம்பத் உள்ளிட்டவர்களைத் தாக்கினர். இதனால் மதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்புஏற்பட்டது.
மதிமுக சார்பில் பொழிச்சலூரில் பொதுக் கூட்டம் நடந்தது. இதில் சிறப்புப் பேச்சாளராக நாஞ்சில் சம்பத் கலந்து கொண்டு பேசினார். அவர்பேசுகையில், தமிழக தொழில்துறை அமைச்சரும், ஆலந்தூர் தொகுதி திமுக எம்.எல்.ஏவுமான தா.மோ. அன்பரசன் குறித்து கடுமையாக குற்றம்சாட்டிப் பேசினார்.
அப்போது அங்கு தி.கவினர் பெரும் திரளாக கூடினர். பல்லாவரம் நகராட்சித் தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய திமுகவினர் பொதுக்கூட்டத்தில் ரகளையில் ஈடுபட்டனர்.
நாஞ்சில் சம்பத் தனது பேச்சைத் திரும்பப் பெற வேண்டும் என்று கோரி கலாட்டா செய்தனர். ஆனால் அதை மறுத்த சம்பத் தொடர்ந்து பேசமுயன்றார். இதையடுத்து திமுகவினர் மேடையில் ஏறி சம்பத் உள்ளிட்ட மேடையில் இருந்தவர்களை சரமாரியாக தாக்கினர்.
மின் விளக்குகள், ஒலிபெருக்கிகளை அடித்து நொறுக்கினர். மின் இணைப்பையும் அவர்கள் துண்டித்தனர். பின்னர் அங்கு என்ன நடந்தது என்றேதெரியாத அளவுக்கு பெரும் வன்முறை மூண்டது. இதில் 2 கார்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
பின்னர் திமுகவினர் அங்கிருந்து ஓடி விட்டனர். இதையடுத்து மின் இணைப்பு மீண்டும் கொடுக்கப்பட்டு மீண்டும் பொதுக்கூட்டம் தொடர்ந்தது.
இந்தத் தாக்குதல் குறித்து பல்லாவரம் காவல் நிலையத்தில் மதிமுக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications