மனிதக் கடவுளாக வந்த நீதிபதி: விஜயகாந்த்
சென்னை:மனிதக் கடவுளாக வந்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா சென்னை மாநகராட்சித் தேர்தல் தொடர்பாக சிறப்பான தீர்ப்பைவழங்கியுள்ளார் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்கள் 67 பேரையும் அறிமுகப்படுத்தும் கூட்டம் மற்றும் தேர்தல் பிரசாரக்கூட்டம் நேற்று இரவு அமைந்தகரை புல்லா ரெட்டி அவென்யூவில் நடந்தது.
மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் கட்டடம் போல பிரமாண்டமாக வடிவமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜயகாந்த் தனது கட்சிவேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார்.
பின்னர் விஜயகாந்த் பேசுகையில், யாரும் தேர்தல் பணிகளைச் செய்யக் கூடாது என்பதற்காக வேகமாக தேர்தல் தேதியை அறிவித்து 8 நாட்கள்மட்டுமே பிரசாரத்துக்கு வழங்கியுள்ளனர்.
உள்ளாட்சித் தேர்தல் சரியாக நடக்கவில்லை, வன்முறை நடந்துள்ளது என்பதை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா மனிதகடவுளாக வந்து சரியான தீர்ப்பு சொல்லியுள்ளார்.
எங்களது வேட்பாளர்களில் 7 பேரைத் தவிர மற்ற அனைவருமே கடந்த தேர்தலில் போட்டியிட்டவர்கள். அவர்களுக்காக வேட்பு மனுவை சரியாகதாக்கல் செய்யத் தெரியாது? திட்டமிட்டுத்தான் 14 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்துள்ளனர்.
நான் எதற்கும் பயப்பட மாட்டேன். நான் யாரையும் நம்பி இல்லை, மக்களையும், கடவுளையும் மட்டுமே நம்புகிறேன். எங்களது 67வேட்பாளர்களையும் தேர்வு செய்து மாநகராட்சிக்கு அனுப்புங்கள். பிறகு அவர்களின் செயல்பாடுகளைப் பாருங்கள்.
அமைச்சர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகளின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளும், மாநகராட்சி, நகராட்சி, பஞ்சாயத்துப் பள்ளிகளிலும் படிக்கவைக்க வேண்டும் என சட்டம் கொண்டு வர வேண்டும். அப்போதுதான் அந்தப் பள்ளிகளின் தரம் உயரும்.
மாணவ, மாணவிகளுக்கு ஒரு வேண்டுகோள். உங்களது செல்போன்கள் மூலம், எங்களின் தீபம் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கோரிஎஸ்.எம்.எஸ். மூலம் பிரசாரம் செய்யுங்கள் என்றார் விஜயகாந்த்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications