உலக கோப்பை அணி அறிவிப்பு-தினேஷ் உள்ளே

Subscribe to Oneindia Tamil

மும்பை:உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் இந்திய அணி வீரர்கள் பட்டியல் இன்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழகத்தைச்சேர்ந்த தினேஷ் கார்த்திக்குக்கும் இடம் தரப்பட்டுள்ளது.

மும்பையில் இன்று நடந்த இந்திய கிரிக்கெட் தேர்வாளர்கள் கூட்டத்தில் இந்த அணி தேர்வு செய்யப்பட்டது.

இலங்கைத் தொடரில் விளையாடும் இந்திய அணி வீரர்களிலிருந்துதான் 15 பேர் கொண்ட அணியைத் தேர்வு செய்வோம் என வெங்சர்க்கார்கூறியிருந்தார்.

அதன்படி அணி தேர்வாகியுள்ளது. அதன் விவரம்: ராகுல் திராவிட் (கேப்டன்), கங்கூலி, வீரேந்திர ஷேவாக், டெண்டுல்கர், தினேஷ் கார்த்திக்,மகேந்திர சிங் தோனி (துணை கேப்டன்), ஹர்பஜன் சிங், அனில் கும்ப்ளே, முனாப் படேல், ஷகீர் கான், இர்பான் பதான், யுவராஜ் சிங், அஜீத்அகார்கர், ராபின் உத்தப்பா, ஸ்ரீசந்த் ஆகியோர்.

கங்குலி, ராபின் உத்தப்பா, முனாப் பட்டேல், திணேஷ் கார்த்திக் ஆகியோருக்கு உலகக் கோப்பை அணியில் நிச்சயம் இடம் கிடைக்கும் என்ற நிலைஉள்ளது. அதேசமயம், வீரேந்தர் ஷேவாக் சேர்க்கப்படுவாரா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

முன்னதாக மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் நீக்கப்பட்டிருந்த ஷேவாக், இலங்கைத் தொடரில் 2 போட்டிகளுக்கு மட்டும்சேர்க்கப்பட்டார். இதில் அவர் விளையாடுவதைப் பொறுத்துத்தான் அவர் உலகக் கோப்பைப் போட்டிக்கு பரிசீலிக்கப்படுவார் என கூறப்பட்டது.

முதல் போட்டி மழையால் பாதிக்கப்பட்டு விட்டது. 2வது போட்டியில் 19 ரன்களை மட்டுமே ஷேவாக் எடுத்தார். இதனால் அவருக்கு உலகக்கோப்பைப் போட்டியில் இடம் கிடைக்குமா என்பதில் சந்தேகம் நிலவியது. ஆனால் ஷேவாக் கண்டிப்பாக வேண்டும் என்று கேப்டன் டிராவிட்வலியுறுத்தினார்.

மயிரிழையில் நழுவ விட்ட இந்தியா:

இலங்கைக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது.

இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி கொல்கத்தாவில் நடந்தபோது மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டுகைவிடப்பட்டது.

இதையடுத்து நேற்று ராஜ்கோட்டில் 2வது ஒரு நாள் போட்டி நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ராகுல் டிராவிட், இலங்கையை பேட்செய்யப் பணித்தார்.

இதையடுத்து இலங்கை பேட்டிங்கைத் தொடங்கியது. முனாப் படேலின் அபாரப் பந்துவீச்சால் இலங்கை வீரர்கள் அடுத்தடுத்து அவுட் ஆகின.ஜெயசூர்யா 9, தரங்கா 11, அத்தப்பட்டு 15, கேப்டன் ஜெயவர்த்தனே 4 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

ஆனால் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குமார் சங்கக்காரா மட்டும் நிதானமாக நிலைத்து ஆடி ரன்களை சேர்த்து வந்தார். அவரது சிறப்பான,பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை அணி சரிவிலிருந்து மீண்டது.

சங்கக்காராவுக்கு துணையாக தில்ஷானும் சிறப்பாக ஆடி 56 ரன்களைக் குவித்தார். இறுதியில், 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 257ரன்களை எடுத்தது இலங்கை. முனாப் பட்டேல் 4 விக்கெட்டுகளையும், ஸ்ரீசாந்த், 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பின்னர் இந்திய அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அதிரடி வீரர் ராபின் உத்தப்பாவும், கங்குலியும் ஆட்டத்தைத் தொடங்கினர். ராபின் உத்தப்பாஇந்தப் போட்டியிலும் பொறிந்து தள்ளுவார் என ரசிர்கள் எதிர்பார்த்திருக்க, வேகமாக அடிக்க ஆரம்பித்தவர் 7 ரன்கள் எடுத்த நிலையில்பொசுக்கென அவுட் ஆகி விட்டார்.

அவரைத் தொடர்ந்து வந்த டிராவிட்டும் 4 ரன்களில் ஆட்டமிழக்க போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கங்குலியும், சச்சினும் இணைந்துஇந்திய இன்னிங்ஸை ஸ்டெடி ஆக்கும் வகையில் நிதானமாக ஆடினர்.

கங்குலி நிதானமாக ஆட, சச்சினோ தனது பாணியில் விளாசித் தள்ளினார். கங்குலி 62 ரன்களை சேர்த்தார், சச்சின் 54 ரன்களை எடுத்தார்.

சச்சின் ஆட்டமிழந்த பின்னர் ஷேவாக் வந்தார். அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் இருந்ததால், ஷேவாக் வந்தபோது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.ஆனால் 19 ரன்களை மட்டுமே எடுத்த ஷேவாக் ஆட்டமிழந்தார்.

கங்குலியும் பின்னர் ஆட்டமிழக்கவே, ஆட்டத்தில் விறுவிறுப்பு குறைந்தது. ஆனால் டோனியும், திணேஷ் கார்த்திக்கும் சேர்ந்து இலங்கைபந்துவீச்சாளர்களுக்கு விளையாட்டு காட்டத் தொடங்கியபோது ரசிகர்களிடையே மீண்டும் உற்சாகம் தொற்றிக் கொண்டது.

இருவரும் சேர்ந்து அபாரமாக ஆடினர். அதிலும் டோனி வழக்கம் போல பட்டாசாகப் பொரிந்தார். மறுமுனையில் கார்த்திக் நிதான ஆட்டத்தைக்காட்டினார். இருவரும் இணைந்து அணியை வெற்றிப் பாதைக்கு மெதுவாக கொண்டு செல்லத் தொடங்கினர்.

இதனால் இந்தியா வெற்றி பெறும் என்ற நம்பிக்கை ரசிகர்களிடையே வந்தது. ஆனால் கார்த்திக் அவுட் ஆனபோது அந்த நம்பிக்கை அப்படியேபொலபொலவென தகர்ந்தது. 31 ரன்களை கார்த்திக் எடுத்தார்.

கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில், டோணி ஒரு பவுண்டரி அடித்து விறுவிறுப்பைக் கூட்டினார். ஆனால் அடுத்த பந்திலேயேஅவர் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியாவின் தோல்வி உறுதியானது.

கடைசி ஓவரில், கடைசிப் பந்தில் சிக்சர் அடித்தால் வெற்றி என்ற நிலையில், ஸ்ரீசாந்த் பந்தை எதிர்கொண்டார். ஆனால் சிக்சர் கிடைக்காமல்போகவே, 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா தோல்வியுற்றது.

சிறப்பாக ஆடிய சங்கக்காரா ஆட்ட நாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரு அணிகளுக்கும் இடையிலான 3வது போட்டி கோவாவில் 14ம் தேதிநடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+