எல்லையில் தமிழர்-கன்னடர் போட்டி போராட்டம்
சென்னை:கடந்த சில நாட்களில் இருமுறை தமிழக எல்லைக்குள் ஊடுறுவி வந்து கன்னடர்கள் தீப்பந்த ஊர்வலம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டதால்,நேற்று மாலை முதல் தமிழக எல்லைப் பகுதிகளில் அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந் நிலையில் கன்னட அமைப்பினருக்குப் போட்டியாக ஓசூரிலிருந்து கர்நாடக எல்லை நோக்கி பேரணியாக கிளம்பிய தமிழ் மக்கள்கூட்டமைப்பைச் சேர்ந்த 80 பேரை போலீஸார் கைது செய்தனர்.
கன்னட அமைப்புகள் சில 2 முறை தமிழக எல்லைக்குள் வந்து காவிரியும் எங்களுக்குத்தான், ஓசூரும் எங்களுக்குத்தான் என்று தீப்பந்தம் ஏந்தியும்,சாலை மறியல் செய்தும் போராட்டம் நடத்தினர்.
இதனால் கொதிப்படைந்த தமிழ் அமைப்புகள் பல ஒன்று சேர்ந்து தமிழ் மக்கள் கூட்டமைப்பு என்ற புதிய அமைப்பைத் தொடங்கியுள்ளன. இந்தஅமைப்பினர் 80 பேர் நேற்று ஓசூர் அருகே உள்ள தமிழக எல்லைப் பகுதியான ஜூஜூவாடியிலிருந்து காலிக் குடங்களுடன் கர்நாடக எல்லைநோக்கி ஊர்வலமாக கிளம்பினர்.
காவிரியும் எங்களுக்குத்தான், பெங்களூரும் எங்களுக்குத்தான் என்று கோஷமிட்டபடி கிளம்பிய அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்திக் கைதுசெய்தனர்.
தமிழக எல்லைப் பகுதியில் கன்னடர்கள் ஊடுறுவாத வகையில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications