திமுக தனித்து போட்டியிட தயாரா?-விஜய்காந்த்
சென்னை:ஆட்சிக்கும் ஊழல் செய்வதற்கும் மட்டும் கூட்டணி வைத்தால் போதாது. மக்களுக்கு நன்மை செய்யவும் கூட்டணி வைக்க வேண்டும் எனதிமுகவைத் தாக்கினார் தேமுதிக தலைவர் விஜய்காந்த்.
சென்னை மாநகராட்சித் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள விஜய்காந்த் சூளைமேடு பகுதியில் பேசியதாவது:
தேமுதிகவை ஆரம்பித்து ஒரு வருடம் 4 மாதம் தான் ஆகிறது. ஆனால், அதற்குள் 3வது தேர்தலை சந்திக்கிறோம். நான் எந்தக் கட்சியின்கூட்டணியையும் நம்பி நிற்கவில்லை. மக்களாகிய உங்களை நம்பியே போட்டியிடுறோம்.
100 வார்டுகளுக்கு தேர்தல் என்றார்கள், ஆனால் 67க்குத் தான் நடக்கிறது. மீதி வார்டுகளில் வேட்பாளர்களை மிரட்டி வாபஸ் பெற வைத்துவென்றுவிட்டார்கள். யாரையும் விடவில்லை, எல்லோரையும் மிரட்டியுள்ளார்கள்.
இந்த மிரட்டலுக்கு பயந்து சூளைமேடு 77வது வார்டில் தேமுதிக சார்பில் போட்டியிடும் சித்ராவைக் கூட அவரது கணவர் போட்டியிலிருந்து விலகிவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
இப்படி ஒரு தேர்தலை நடத்துவதைவிட பேசாமல் அவர்களே கவுன்சிலர்களை நியமித்துக் கொள்ளலாம்.
திமுக அரசு கவர்ச்சி திட்டங்களை தான் அறிவிக்கிறது. வளர்ச்சித் திட்டம் ஏதுமில்லை.
தண்ணீருக்காக மற்ற மாநிலங்களை நம்பித்தான் இருக்கிறது தமிழகம். தண்ணீர் வரவில்லை என்றால் உடனே மத்திய அரசு கூட்டணியை விட்டுவிலகி இருக்க வேண்டாமா?.
ஆட்சிக்கும் ஊழல் செய்வதற்கும் மட்டும் கூட்டணி வைத்தால் போதாது. மக்களுக்கு நன்மை செய்யவும் கூட்டணி வைக்க வேண்டும்.
திமுக கூட்டணியை நம்பித்தான் நிற்கிறது. அந்தக் கட்சி தனித்துப் போட்டியிடத் தயாரா?. மூன்றாம் இடத்தில் இருந்த நாங்கள் இரண்டாவதுஇடத்துக்கு வளர்ந்திருக்கிறோம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications