மாணவிகள் எரிக்கப்பட்ட வழக்கில் நாளை தீர்ப்பு
சேலம்:தர்மபுரியில் கோவை வேளாண்மைக் கழக மாணவிகள் பஸ்சோடு சேர்த்து அதிமுகவினரால் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் நாளைதீர்ப்பு வழங்கப்படுகிறது.
கொடைக்கானல் பிளசன்ட் ஸ்டே ஹோட்டலுக்கு விதியை மீறி சலுகை அளித்த ஜெயலலிதாவுக்கு எதிராக ஓராண்டு சிறை தண்டனைவிதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு 2005ம் ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி தீர்ப்பு வெளியானது.
இதையடுத்து மாநிலம் முழுவதும் அதிமுகவினர் அராஜகத்தில் இறங்கினர். வன்முறை தாண்டவமாடினர்.
கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மாணவிகள் தர்மபுரிக்கு பல்கலைக்கழக பஸ்சில் வந்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதுஅதிமுகவினர் அந்த பஸ்ஸை வழி மறித்தனர்.
உள்ளே மாணவ, மாணவிகள், ஆசிரியைகள் இருப்பதைக் கூட கண்டு கொள்ளாமல் அந்த பஸ்சுக்கு கும்பல் தீ வைத்தது. இதில் கோகிலவாணி(19), ஹேமலதா (19), காயத்ரி (19) ஆகிய மாணவிகள் பஸ்சுக்குள்ளேயே எரிந்து சாம்பலாயினர்.
மேலும் 18 மாணவிகள் பலத்த காயமடைந்தனர். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கை அதிமுக அரசு மிக அலட்சியமாக நடத்தியது.அதிமுகவினரை தப்ப வைக்க போலீசாரும், அரசு வக்கீலும் முயன்றனர்.
இதையடுத்து உயர் நீதிமன்றம் தலையிட்டு அரசை கண்டித்து, வழக்கை தர்மபுரியில் இருந்து சேலத்துக்கு மாற்றியது. அரசு வக்கீலையும் மாற்றியது.ஆனால், அந்த வழக்கறிஞருக்கு போதிய ஆவணங்களைத் தராமல் இழுத்தடித்தனர்.
இதனால் வழக்கு விசாரணை நீண்டு கொண்டே போனது.
இந்த வழக்கில் அதிமுகவினரான நெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்த ஏழு ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் நாளை இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications