விஜயகாந்த் மண்டபத்தை இடிக்க தடை இல்லை!
சென்னை:தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தை, மேம்பாலம் கட்டும் பணிக்காகஇடிப்பதற்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது. இதுதொடர்பாக விஜயகாந்த்தின்மனைவி பிரேமலதா தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.
சென்னை கோயம்பேடு ரவுண்டானா அருகே விஜயகாந்த்துக்குச் சொந்தமான ஆண்டாள் அழகர் திருமணமண்டபம் உள்ளது. இப்பகுதியில் பல அடுக்கு மேம்பாலம் கட்ட மத்திய நெடுஞ்சாலைத் துறை மடிவுசெய்துள்ளது.
![]() |
இதற்காக விஜயகாந்த்தின் கல்யாண மண்டபத்தின் ஒரு பகுதி மற்றும் அப்பகுதியில் உள்ள பலகட்டடங்களைகையகப்படுத்த நெடுஞ்சாலைத் துறை முடிவு செய்தது.
இது திமுக அரசின் உள்நோக்கம் கொண்ட நடவடிக்கை என விஜயகாந்த் விமர்சித்தார். இதை எதிர்த்துபிரேமலதா (அவரது பெயரில்தான் நிலம் உள்ளது) சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், அரசியல் உள்நோக்கத்தோடு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நெடுஞ்சாலைத் துறை அமைச்சர்டி.ஆர்.பாலு பழிவாங்கும் வகையில் செயல்படுகிறார். எனவே இந்த நடவடிக்கைக்குத் தடை விதிக்கவேண்டும் என்று கோரியிருந்தார்.
நீதிபதி ராமசுப்ரமணியம் முன்னிலையில் இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மத்திய அரசின் சார்பில்ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில், மொத்தம் 161 பேரின் நிலத்தை பாலம் கட்டுவதற்காககையகப்படுத்துகிறோம். அவற்றில் ஒன்றுதான் ஆண்டாள் அழகர் கல்யாண மண்டபம்.
அனைவருக்கும் நஷ்ட ஈடு கொடுத்துள்ளோம். விஜயகாந்த்துக்கும் ரூ. 8 கோடி வரை நஷ்ட ஈடாகநிர்ணயித்துள்ளோம். மண்டபத்தின் ஒரு பகுதியைத்தான் இடிக்கவுள்ளோம். இருப்பினும் முழு மண்டபத்தின்மதிப்பையும் கணக்கிட்டு 8 கோடி ரூபாய் கொடுக்க முன் வந்துள்ளோம் என்றார்.
![]() |
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, பிரேமலதாவின் மனுவைத் தள்ளுபடி செய்தார். மேலும்மண்டபத்தை இடிக்க தடை விதிக்கவும் அவர் மறுத்து விட்டார்.
விஜய்காந்த் ஒரு அரசியல் எலி-பாக்யராஜ்:
இந் நிலையில் அரசியலில் விஜயகாந்த் ஒரு எலி என திமுகவைச் சேர்ந்த நடிகர், இயக்குநர் பாக்யராஜ் கூறியுள்ளார்.
சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பாக்யராஜ் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில், விஜயகாந்த் எதற்கெடுத்தாலும் கருணாநிதியைவிமர்சிக்கிறார். சரி, அதி.கவை ஏன் விமர்சிக்க மாட்டீர்கள் என்று கேட்டால், அது எம்.ஜி.ஆர். ஆரம்பித்த கட்சி, விமர்சிக்க மாட்டேன் என்கிறார்.
விஜயகாந்த்தை நினைத்தால் எனக்கு ஒரு எலிக் கதைதான் நினைவுக்கு வருகிறது. ஒரு எலி இருந்ததாம், அதற்கு தன்னை விட பெரிய மிருகங்களைப் பார்த்ததும், அதைப் போல தானும் மாறஆசைப்பட்டு, கடவுளிடம் வரம் கேட்டது.
பூனை, நாய், புலி என்று பல மிருகங்களாய் மாறி பிறகு சிங்கமாக மாறியது. அப்போது காட்டில் இருந்த சிங்கத்தை எதிர்த்து மோதும்போது பலத்த காயம் அடைந்தது. அந்த நிலையில்தான்விஜயகாந்த்தும் இருக்கிறார்.
சினிமாவில் அவர் எதையும் செய்யலாம். அரசியலில் கருணாநிதி பாரம்பரியச் சிங்கம், அரசியலில் என்றும் அவர் ராஜா. அவரை விஜயகாந்ததால் வீழ்த்த முடியுமா? யாரை எதிர்த்துப் பேசுகிறோம்,என்ன பேசுகிறோம் என்பதை யோசித்துப் பேச வேண்டும்.
ஆழம் தெரியாமல் காலை விட்டு விட்டு இப்போது முழிக்கிறார். அவருக்கு நேரம் சரியில்லை. அவரெல்லாம் ஊருக்குத்தான் உபதேசம் செய்கிறார். ஆனால் அவர் எதையும் பின்பற்றுவதுகிடையாது.
மக்கள் நலனுக்காக பாலம் கட்ட முயன்றால் அய்யோ கல்யாண மண்டபத்தை இடிக்கப் பார்க்கிறார்களே என்று புலம்புகிறார். ஆனால் மக்கள் நலம் நாடுபவர் கருணாநிதி என்றார் பாக்யராஜ்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?














Click it and Unblock the Notifications