இன்றும் துக்கம் தீராத ஹேமலதாவின் தாயார்!
சென்னை:தர்மபுரி பேருந்து எரிப்பில் எங்களது மகள் ஹேமலதா உயிரோடு எரிந்து கருகிய துக்கத்திலிருந்து நாங்கள்இன்னும் மீளவில்லை, இந்த தீர்ப்பு சரியான தண்டனை என்று பஸ் எரிப்பில் பலியான மாணவி ஹேமலதாவின்தாயார் காசியம்மாள் கண்ணீர் மல்கக் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் நேற்று பரபரப்புத் தீர்ப்பு வெளியானது. முக்கிய குற்றவாளிகளான அதிமுகவைச் சேர்ந்தநெடுஞ்செழியன், ரவீந்திரன், முனியப்பன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை பலியான மாணவிகள் கோகிலவாணி, ஹேமலதா, காயத்ரி ஆகியோரின் குடும்பத்தினர் கண்ணீர்மல்க வரவேற்றுள்ளனர். மாணவி ஹேமலதாவின் குடும்பம் தற்போது சென்னை அருகே மாடம்பாக்கம் என்றஇடத்தில் வசித்து வருகிறது.
ஹேமலதாவின் தாயார் காசியம்மாள் இந்தத் தீர்ப்பு குறித்துக் கூறுகையில், பஸ் எரிந்த காட்சியை நான்இதுவரை டிவியில் காட்டியபோது பார்க்கவில்லை. அதைப் பார்க்கும் தைரியம் எனக்கு இல்லை.
19 வருடம் பாடுபட்டு வளர்த்த ஹேமாவை தீக்கு இரையாக்கி விட்டோம். அது எங்களது தலைவிதி. மகள்இறந்து 7 ஆண்டுகள் ஆகி விட்டாலும், இன்னும் எங்களது சோகம் போகவில்லை. அந்த துக்கம் இன்னும்போகவில்லை.
எந்தப் பாவமும் அறியாத, எந்த சம்பந்தமும் இல்லாத, எங்கள் பிள்ளைகளை துடிக்கத் துடிக்ககொன்றவர்களுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. அவர்களை தூக்கில் போட வேண்டும். அப்போதுதான்விலைமதிப்பற்ற உயிர்களை கொளுத்த நினைப்போருக்கு நல்ல பாடமாக அமையும்.
இந்தத் தண்டனை சரியானதுதான். இதுபோன்ற தப்பை இனிமேல் யாரும் செய்யக் கூடாது என்றா காசியம்மாள்கண்ணீர் மல்க.












Click it and Unblock the Notifications